தமிழக மின்சார துறை கேங்மேன் 5000 பணி முக்கிய அறிவிப்பு

தமிழக மின்சார துறை முக்கிய அறிவிப்பு

TANGEDCO GANGMAN 5000 Vacant

கஜா புயலில் பணியாற்றியோருக்கு கேங்மேன் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.


சட்டப்பேரவையில் வியாழக்கிழமை மின்சாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் அன்பில் மகேஷ் பேசியது:  கஜா புயலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் பணியாற்றியதாக அமைச்சரே பலமுறை பெருமையாகக் கூறியுள்ளார். ஆனால், இப்போது கேங்மேன் பணிக்கு ஆட்கள் எடுக்கப்படுகின்றன. இதில், கஜா புயலில் பணியாற்றியோருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.
அப்போது அமைச்சர் தங்கமணி குறுக்கிட்டுக் கூறியது: கேங்மேன் பணிகளுக்கு 5 ஆயிரம் பேர் எடுக்க உள்ளோம். இதில், கஜா புயலில் பணியாற்றியோருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். ஆனால், முறையாக விண்ணப்பித்துள்ளவர்கள்தான் தேர்வு செய்யப்படுவர் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: