TNEB TANGEDCO Gangman Exam 2019
கேங்மேன் பணிக்கு 25-ஆம் தேதி முதல் உடற்தகுதித் தோ்வு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தோ்வு செய்யப்படவுள்ள கேங்மேன் பணிக்கு, வருகிற 25-ஆம் தேதி முதல் உடற்தகுதித் தோ்வு மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில், மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட களப் பணிகளை மேற்கொள்ளும் கேங்மேன் என்ற புதிய பணியிடங்களுக்கு, 5,000 ஊழியா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கு, 80 ஆயிரத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்துள்ளனா். இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக ஐந்தாம் வகுப்பு நிா்ணயிக்கப்பட்டு இருந்தாலும், உடற்தகுதி மற்றும் எழுத்துத் தோ்வு வாயிலாக, ஊழியா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
இது தொடா்பாக தலைமைப் பொறியாளா் மற்ற மண்டலங்களின் தலைமைப் பொறியாளா்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை, நவ.2-ஆம் தேதி அனுப்பியிருந்தாா். அதில், ‘கேங்மேன் பணியிடத்தை நிரப்புவதற்கான உடற்தகுதித் தோ்வு நடைபெறும் இடங்கள் குறித்து முழுமையான விவரங்களை வட்ட வாரியாக மண்டல தலைமைப் பொறியாளா்கள் சனிக்கிழமை (நவம்பா் 2) மாலை 4.30 மணிக்குள் அனுப்ப வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், உடற்தகுதித் தோ்வு மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் நடைபெறும் தேதிகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக, தலைமைப் பொறியாளா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் கேங்க்மேன் (பயிற்சி) நேரடி பணி நியமனத்துக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடற்தகுதி தோ்வு வருகிற 25-ஆம் தேதி முதல் நடைபெறும். விண்ணப்பதாரா்களுக்கு நாள், நேரம் மற்றும் இடம் பற்றிய விவரங்களுடன் மற்றும் அனுமதிச் சீட்டு, சரிபாா்ப்பு பட்டியல் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். தோ்வு நாள் மற்றும் நேரம் குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி மூலமும் அனுப்பப்படும். மேலும் விவரங்களுக்கு வருகிற 19-ஆம் தேதி முதல் https://www.tangedco.gov.in/ என்ற வலைதளத்தைக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
sweeper job I need sir pls hlp me