கணினி ஆசிரியர் தேர்வு ஜூன் 23

ஜூன் 23-இல் கணினி ஆசிரியர் தேர்வு: நுழைவுச்சீட்டு வெளியீடு

தமிழகத்தில்  வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள கணினி ஆசிரியர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்கள், இளநிலை கணினி அறிவியல் படிப்புடன் பி.எட். முடித்தவர்களும், தேசிய கல்வியியல் கவுன்சில் விதிகளின்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான, கணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்புடன் பி.எட்., முடித்தவர்களும் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என தமிழக பள்ளிக் கல்வித் துறை அண்மையில் அரசாணை வெளியிட்டது.
இதைப் பின்பற்றி, 814 கணினி ஆசிரியர் காலியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. கடந்த மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிட்டது. இந்தப் பதவிக்கு, ஆன்லைன் வழி கணினி தேர்வு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்க தேர்வர்கள் கடந்த மார்ச் 20-ஆம் தேதி முதல், ஏப்ரல் 10-ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பித்தனர். இந்த நிலையில், இந்தத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
கணினி பயிற்றுநர் நிலை 1-க்கான (முதுநிலை நிலை) கணினி வழித் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்தத் தேர்வுக்கு உரிய அனுமதிச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in)  தேர்வர்கள் பயனியர் குறியீடு மற்றும் கடவுச் சொல்லை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யும் வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் நுழைவுச்சீட்டினை பிரதி எடுத்து ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை,  விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதி ஆகியவற்றை  எடுத்துவர வேண்டும். தேர்வு நாளான ஜூன் 23-ஆம் தேதி காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு கண்டிப்பாக வருகை தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) 2018 – 2019 – Admit Card 

DIRECT RECRUITMENT TO THE POSTS OF COMPUTER INSTRUCTORS GRADE – I (PG CADRE) 2018-2019

Computer Based Examination Admit Card

Teachers Recruitment Board issued Notification for the Direct Recruitment of Computer Instructors Grade – I (PG Cadre) 2018-2019 vide Notification No.09/2019 dated 01.03.2019. In this connection, Teachers Recruitment Board now releases the Provisional Admit Card for those candidates who applied for the said examination.

Date of Computer based Examination: 23.06.2019 (Sunday 10.00 AM to 1.00 PM)

The candidates are requested to use their User ID and Password for downloading their Admit Card through the website http://www.trb.tn.nic.in from 16.06.2019.

Step 1 – Click Login

Step 2 – Enter User ID and Password

Step 3 – Click Dashboard

Step 4 – Click Here to download Admit Card

It is informed to all applicants that the decision of the Board to issue Admit Card to all applicants is purely provisional and does not confer any acceptance of their claims made in the application form. The Board reserves its right to reject the candidature at any stage of the recruitment.

Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d