2 percent for sports Quota in government job
அரசுப் பணியில் விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீத உள் ஒதுக்கீடு
சிறந்த விளையாட்டு வீரர்களுக்குத் தகுதி அடிப்படையில் 2 சதவீதம் வரை உள்ஒதுக்கீடாக அரசுப் பணி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
தமிழகத்தில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு கூட்டமைப்புகள் நடத்தும், தேசிய அளவிலான முதுநிலைப் போட்டிகள், தமிழக அளவிலான போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்றாலோ, தமிழகம் சார்பாக கலந்து கொண்டால்கூட அவர்களுக்கு அரசு அல்லது பொதுத் துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட பதவிகளில் தகுதியின் அடிப்படையில் 2 சதவீதம் வரை உள் ஒதுக்கீடாக வேலைவாய்ப்பு வழங்கப்படும்.