என்ஜினீயரிங் படிப்புக்கு நீட் தேர்வு
2019 முதல் NEET
2019 முதல் என்ஜினீயரிங் படிப்புக்கும் நீட் தேர்வு(NEET Exam) வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக, ம்ம்கவுன்சிலின் துணை தலைவர் எம்.பி. பூனியா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, அகில இந்திய அளவிலான நீட் நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்தது.
கடந்த இரண்டு ஆண்டுகள் நீட் (NEET) மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவ சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையையும் நீட் தேர்வு அடிப்படையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் துணைத் தலைவர் எம்.பி. பூனியா தெரிவித்துள்ளார்.