மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு

7th Pay Commission Latest News

Cabinet Approves 2% DA Hike 

Central Government Employees

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி, 9 சதவீதமாக வழங்க அளிக்கப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Central Government Employees

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று, இந்த ஒப்புதலை அளித்துள்ளனர்

இந்த அறிவிப்பு மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தப்பட்டது

அடுத்த 4 மாதங்களில் மீண்டும் 2 சதவீதம் உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட இந்த அகவிலைப்படி ஜூலை மாதம் முன்தேதியிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசில் பணியாற்றும் 48 லட்சம் அரசு ஊழியர்கள், 62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் அகவிலைப்படி 9 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த உயர்வால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,112.20 கோடி செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: