NEET Exam Result Today
இந்த பதிவில் நீட் தேர்வு முடிவுகள் பற்றிய சில முக்கிய தகவல்கள் (NEET Exam Result Today) கொடுக்கப்பட்டுள்ளன.
Topic : NEET Exam Result
NEET Exam Result
நீட் (மருத்துவ நுழைவுத் தேர்வு) தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.
நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன, நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 6 ஆம் தேதி நடைபெற்றது.
தமிழகத்தில் இருந்து 1.07 லட்சம் பேரும் நாடு முழுவதும் 13 லட்சம் பேரும் இந்த தேர்வை எழுதினர்.
நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
ஆனால் இன்று நீட் தேர்வு முடிவு பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
CBSE confirms NEET result date; the result will be declared today at 2 pm.
www.cbseneet.nic.in என்ற இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலார் அனில் ஸ்வரூப் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET – நீட்) அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு முதல் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் – AYUSH) படிப்புகள் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவருக்கும் நீட் தேர்வு கட்டாயமாக் கப்பட்டுள்ளது.
அதன்படி, நாடுமுழுவதும் 2018-19 கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் 136 நகரங்களில் 2,255 மையங்களில் நடந்த நீட் தேர்வை விண்ணப்பித்திருந்த 13 லட்சத்து 26,725 மாணவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல் தமிழகத்தில் 10 நகரங்களில் 170 மையங்களில் 1 லட்சத்து 7,288 மாணவர்களில், 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
தமிழக அரசு மற்றும் பல்வேறு தனியார் அமைப்புகளின் உதவியால் மிகுந்த சிரமத்துக்கிடையே ரயில்கள், பேருந்துகளில் சென்று மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்நிலையில், நீர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. முன்னதாக நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுவதாக இருந்தது.
இதனை மாற்றி இன்று வெளியிட சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலார் அனில் ஸ்வரூப் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
ஆதாரம் : தி இந்து செய்தித்தாள்