நீட் தேர்வில் தவறான கேள்விக்கு 196 மதிப்பெண்கள் வழங்கும் உத்தரவு ரத்து

NEET Exam 196 Marks

Tamil Translation Issues

நீட் தேர்வில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 49 கேள்விகள் பிழையாக இருந்ததாக ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஜூலை 10ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் 196 மதிப்பெண்கள் வழங்கி, தரவரிசைப்பட்டியலை திருத்தி வெளியிடுமாறு சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டது.

பின் சிபிஎஸ்இ கடந்த 16ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
மேலும் நீட் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழிபெயர்ப்பாளர்கள் தான் காரணம் என்று சிபிஎஸ்இ குற்றம்சாட்டியது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நீட் தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விகளுகு196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், 2019 நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பு சரியாக இருக்க வேண்டும்.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்படும் கேள்விகளை மீண்டும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்க்க வேண்டும்.

அப்போது தான் மொழியாக்கம் சரியாக உள்ளதா என்பது தெரிய வரும் என தேசிய தேர்வு ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: