பெட்ரோல் விலை குறைப்பு
Rs.2.5 cuts in petrol & diesel prices
பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹2.50 குறைப்பு டீசல் விலையும் குறைப்பு
பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத உயர்வை சந்தித்து மக்களை அச்சுறுத்துகிறது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என மக்கள் எதிர்பாக்கும் நேரத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை தலா ₹1.50 குறைப்பதாக அறிவித்தார்.
எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ₹1 குறைப்பதாக தெரிவித்துள்ளன.
இதன்மூலம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹2.50 விலை குறையும் என்றார்.
இந்த விலை குறைப்பின் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 10,500 கோடி இழப்பு ஏற்படும் என்று ஜெட்லி தெரிவித்தார்.
மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று ஜெட்லி வலியுறுத்தினார்.