புல்வாமா தாக்குதல்: Pulwama Terror attacks

புல்வாமா தாக்குதல்

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்றுமுன்தினம் மாலை துணை ராணுவப்படையினர் 2,500 பேர் 90க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது 150 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி ஏற்கெனவே தெரிவித்துள்ளார். அதுபோலவே வர்த்தகம் செய்வதில் இந்தியாவுக்கு நட்பு நாடு என்ற அந்தஸ்தும் பாகிஸ்தானுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சர்வதேச நாடுகளுடன் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக நெருக்கடி அளிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

கடந்த 2016 செப்டம்பரில் காஷ்மீரின் யூரி ராணுவ முகாம் மீது ஜெய்ஷ்-இ-முகமது தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக செப்டம்பர் 28-ம் தேதி காஷ்மீரை ஒட்டிய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்கள் நுழைந்து ஏராளமான தீவிரவாத முகாம்களை அழித்தனர்.

வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது எனினும் பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுத்தாகவேண்டும்.

நாட்டில் எவ்வாறு பயங்கரவாதத்தை அடக்குவது என்று யோசிப்பதற்கு பதிலாக அமைதி நிலவுவதற்கு என்ன செய்யவேண்டும் என்று யோசித்தாலே இந்த வன்முறைகள் குறையும் அமைதி நிலவும் என்று நம்புகிறோம். அதியமான் குடும்பத்தின் சார்பாக கொல்லப்பட்ட வீரர்கள் ஆன்மா சாந்தி  அடையவும், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும்,காயமடைந்தவர்கள் விரைவில்  குணமாகவும் வேண்டுகிறோம்.

SIMILAR ATTACKS
*Nine IED blasts, including two in Pulwama, in 2018, no casualties
*Attack on CRPF ROP in Nawgam on Dec 11, 2013, 1 personnel killed
*Attack on CRPF ROP on Dec 3, 2014, in Pulwama, 1 killed
*CRPF convoy attacked on Dec 7, 2015, in Pampore, 5 injured
*CRPF convoy attacked on Feb 20, 2016, 2 killed
*CRPF convoy attacked on June 25,2016, 8 killed
*Attack on ROP on May 11, 2015, in Bejbiera, 2 killed
*Amarnath Yatra convoy attacked  on July 10, 2017, 7 pilgrims killed

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: