துப்புரவு வேலைக்கு விண்ணப்பித்த இன்ஜினியரிங் பட்டதாரிகள்

TN Assembly Sweeper Jobs

துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு  விண்ணப்பித்த இன்ஜினியரிங் பட்டதாரிகள்

சென்னையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கான 14 பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்ற அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 4607 பேர் விண்ணபித்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் 26ம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பில் உடல் தகுதி மற்றும் வயது வரம்பு ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 18 வயது நிரம்பியவர்களும், உடல் குறைப்பாடு இல்லாதவர்களும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 677 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சில விண்ணப்பங்கள் மறு பரிசீலனையில் உள்ளது. இந்த பணிகளுக்கு பட்டதாரிகள் பலரும் விண்ணப்பித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெறப்பட்ட விண்ணப்பங்களில் கிட்டத்தட்ட 4000 விண்ணப்பங்கள் இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரிகள் விண்ணப்பித்தார்கள் என்று தெரியவந்துள்ளது.

2 thoughts on “துப்புரவு வேலைக்கு விண்ணப்பித்த இன்ஜினியரிங் பட்டதாரிகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: