தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

அதன்படி தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு குறித்து தமிழக அரசு நிதித்துறை வெளியிட்ட அரசாணையில், ”முழு நேரமாகப் பணிபுரிந்து அகவிலைப்படியைப் பெற்று வரும் தமிழக அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் ஊழியர்கள்  உள்ளிட்டோருக்கும் இது பொருந்தும்.

இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகவிலைப்படி 7 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அகவிலைப்படி மீண்டும் 3 சதவீதம் ஏற்றி முன் தேதியிட்டு பலன் கிடைக்கும் வகையில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

The revised Dearness Allowance sanctioned in this order shall also apply to the teaching and non-teaching staff working in aided educational
institutions, employees under local bodies, employees governed by the University Grants Commission/All India Council for Technical Education scales of pay, the Teachers/Physical Education Directors/Librarians in Government and Aided Polytechnics and Special Diploma Institutions, Village Assistants in Revenue Department, Noon Meal Organisers, ChildWelfare Organisers, Anganwadi Workers, Cooks, Helpers, Panchayat Secretaries/Clerks in Village Panchayat under Rural Development and Panchayat Raj Department and other employees drawing pay in the prescribed Level of Pay in the Special Pay Matrix.

 

G.O.Ms.No.151 Dt: May 20, 2019   Download Icon 527KB

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading