TNPSC குரூப் 4 2018 கலந்தாய்வு
TNPSC குரூப் – 4 (CCSE 4 ) 2018 தேர்வில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வில் தனித்தகவல்களும் ஓ.எம்.ஆர் தாளில் முன்கூட்டியே அச்சிடப்பட்டதால் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டன.
TNPSC குரூப் 4 (group 4) 2018 பணியிடங்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC ) அறிவித்துள்ளது.
TNPSC செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் TNPSC தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
இதில் 14,26,010 பேர் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இவர்களில் 6,28,443 பேர் ஆண்கள், 7,97,532 பேர் பெண்கள், 35 பேர் இதர பாலினத்தவர்கள்.
ஆகஸ்ட் 16-30 வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கு பின் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். கலந்தாய்வு அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கும். தேர்வு எழுதியவர்கள் எந்த இ-சேவை மையங்களில் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற தகவல் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Check Your Group 4 VAO Result
Check Here
TNPSC Group 4 Official Press Release
Check Here
TNPSC Group 4 Vacancies Increased
Check Here