TNPSC Group 4 Vacancies increased to 11,280
TNPSC செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் TNPSC தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
காலிப் பணியிடங்கள்
Group 4 தேர்வு அறிவிப்பின்போது 9,351 காலிப் பணியிடங்கள் இருந்தன. நேற்றைய நிலவரப்படி, 11,280 காலியிடங்களாக அதிகரித்துள்ளன.
Group 4 தேர்வு அறிவிக்கப்பட்டபோது இருந்த 494 வி.ஏ.ஓ. பணியிடங்கள் நேற்று வரை 1,107 ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, பிற பதவிகளிலும் காலிப் பணியிடங்கள் அதிகரித்துள்ளன. இது மேலும் மாற்றம் அடைய வாய்ப்புள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற Group 4 தேர்வுக்கு மொத்தம் 20,83,152 பேர் விண்ணப்பித்தனர். இதில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 20,69,380. இவர்களில் 17,53,154 பேர் தேர்வெழுதினர்.
இந்நிலையில் Group 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 14,26,010 பேர் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இவர்களில் 6,28,443 பேர் ஆண்கள், 7,97,532 பேர் பெண்கள், 35 பேர் இதர பாலினத்தவர்கள். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட சுமார் 1.25 லட்சம் பேர் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Group 4 தேர்வுடன் சேர்த்து VAO. தேர்வும் ஒன்றாக நடத்தப்பட்டதால், தேர்வாணையத்துக்கு சுமார் 12 கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
Check Your Group 4 VAO Result
Check Here
TNPSC Group 4 2018 கலந்தாய்வு
Check Here
TNPSC Group 4 Official Press Release
Check Here
TNPSC Group 4 2018 கலந்தாய்வு அக்டோபர் இறுதி வாரத்தில் தொடங்கும்
Pingback: TNPSC Group 4 2018 Councelling will begin last week of October