TNPSC Group 4 Certificate upload date Announced – 30.8.2018

TNPSC Group-IV Services – Certificate upload date 

 30.08.2018 to 18.09.2018

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிக்கை எண் 23/ 2017 இன் படி தொகுதி 4ல் அடங்கிய பதவிக்கான எழுத்துத் தேர்வின் 11 .2. 2018 அன்று நடத்தி அதற்கான தேர்வு முடிவுகளை (தரவரிசை பட்டியல்) 30.7. 2018 அன்று வெளியிடப்பட்டுள்ளது .அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு இந்த தெரிவுக்கான சேர்க்கப்பட்டுள்ளன.

இதற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய தேதி 16.08. 2018 முதல் 30.08. 2018 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது

கூடுதல் பணியிடங்கள் பெறப்பட்டு அதன் காரணமாக இனச்சுழற்சி அடிப்படையில் எந்தெந்த வகுப்பினருக்கு துறைவாரியாக எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன என்பதை கணக்கிட்டு அதற்கு உரிய சான்றிதழ் பதிவேற்றம் செய்யவேண்டிய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை கண்டறிய கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

எனவே சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய விண்ணப்பதாரர்களின் பட்டியல் 27. 8 .2018 அன்று தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் 30.8. 2018 முதல் 18. 9. 2018 வரை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இ சேவை மையங்களில் மட்டும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இசசேவைக்கான தெரிவுசெய்யப்பட்டுள்ள அரசு இ-சேவை மையங்களின் முகவரிகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பதிவேற்றம் செய்ய விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை கொண்டுவரவேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ள விவரங்களுக்கு அதற்குரிய சான்றுகளையும் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒருவேளை விண்ணப்பத்தில் தவறான தகவல்களைப் பதிவு செய்து, அதற்கான சான்றிதழ் அவர்களிடம் இல்லை எனில் தங்களிடம் சான்றிதழ் இல்லை என்பதைக் குறிப்பிட்டு தேர்வுக் கட்டுப்பாடு அலுவலருக்கு ஒரு கடிதம் எழுதி கையொப்பமிட்டு அதனை ஸ்கேன் செய்து உரிய இணைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சான்றிதழ் பதிவேற்றம் செய்யப் படாத விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் .விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள ஏதேனும் சில விவரங்களுக்கு மட்டும் உரிய சான்றுகளை பதிவேற்றம் செய்ய வில்லை எனில் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட  வாய்ப்புள்ளது.

இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 044-25300336, 044-25300337 தொலைபேசி எண்களிலும் மற்றும் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

TNPSC Group-IV Services – Certificate upload date

Check official Press Release from TNPSC –  Click Here

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: