TNUSRB SI எஸ்.ஐ. தேர்விலும் முறைகேடு?
தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும் காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வுக்கான அறிவிப்பை 2019 மார்ச் மாதம் வெளியிட்டு ஜனவரி 12 ,13 தேதிகளில் நடைபெற்றது. முதல் கட்டமாக நடைபெற்ற பொது பிரிவுக்கான தேர்வு மிகவும் கடினமாக இருந்த நிலையில், 13ஆம் தேதி நடைபெற்ற காவலர் துறையினர்களுக்கான 20 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான தேர்வு தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் நடைபெற்றது
பொதுத்தேர்வில் பங்கேற்ற மாணவர்களில் அதிகம் பேர் தேர்ச்சி பெறமாட்டர்கள் என்ற நிலையில் காவலர்களாவது தேர்ச்சி பெறட்டும் என காவல்துறை அதிகாரிகளே கதவை திறந்து வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற தேர்வில் 60 கேள்விகளை மூன்று காவலர்கள் 20, 20 கேள்விகளாக பிரித்து அதற்கான பதிலை இணையதளத்தின் மூலமாக உடனடியாக கண்டுபிடித்து மிக விரைவாக தேர்வுகளை எழுதி முடித்துள்ளனர். இது போலவே மற்ற கேள்விகளுக்கும் பதில்களை கண்டுபிடித்து எழுதியுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நன்றி – நக்கீரன்
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=556125