Railways to fill up over 1 lakh vacancies by March-April 2019
இந்தியன் ரயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்களை 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிரப்பப்படும் என ரயில்வே வாரியத் தலைவர் அஸ்வனி லோகானி தெரிவித்துள்ளார்.
ரயில்வேயில் ஒரு லட்சத்துப் பத்தாயிரம் காலிப் பணியிடங்கள்கள் உள்ளது. இந்த பணியிடங்களுக்காக 2 கோடியே 27லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அஸ்வானி லோகானி கூறியுள்ளார்.
ரயில்வே பாதுகாப்புப் படை உள்ளிட்ட தேர்வு செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்படும்.
2.27 கோடி விண்ணப்பங்கள் நிலை வரும் ஜூலை 10 ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்படும். டிசம்பர்-ஜனவரி மாத இறுதிக்குள் அவர்களின் உடல் மற்றும் மனோதத்துவ தேர்வுகள் முடிவடையும். மார்ச் மாதம் அவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
ரயில்வே தேர்வுகள் இந்தி, ஆங்கிலம், உருது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட 15 மொழிகளில் நடைபெறும் என்றும் அஸ்வானி லோகானி தெரிவித்துள்ளார்.