Railway Ministry Reply to Group D result
ரயில்வே குரூப் D தேர்வு முடிவுகள் தவறு உள்ளது என குற்றம் சாட்டி வரும் இந்த நிலையில் ரயில்வே துறையில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள RRB Group D தேர்வு முடிவுகளில் உள்ள மதிப்பெண்கள் சரியாக தான் உள்ளது என்றும் சமூகவலைதளங்களில் பரவி வரும் மதிப்பெண் பட்டியல் ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட மதிப்பெண்கள் என்று ரயில்வே துறை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பெரும்பாலான மாணவர்கள் Normalized ஸ்கோர் 100 க்கும் அதிகமாக உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளனர். அதேபோல சிலரது மதிப்பெண்கள் மிகவும் குறைவாக உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளனர் அவர்கள் தேர்வுக்கு தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பதையும் அதற்கான பதிவு எண்கள் பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். தெற்கு ரயில்வேயில் அதிகப்படியான வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. ரயில்வே துறை மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளிலுமே தொடர்ச்சியாக தமிழக இளைஞர்களுக்கு உள்ள வேலை வாய்ப்பை தட்டிப் பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக தமிழக மாணவர்களுக்கான வேலைவாய்ப்பில் வட மாநிலத்தவர்கள் போட்டியிடாத சட்டம் இயற்றினால் மட்டுமே இந்த நிலை மாறுபடும். தமிழக வேலைவாய்ப்பு உரிமை நமக்கு முற்றிலுமாக கிடைக்கும்.
A candidate score sheet with very high score is being made viral. Please note that this score sheet is morphed. The correct score sheet is given below. Please don’t be misguided by unscrupulous elements. Indian Railways Recruitment system is fair and transparent. pic.twitter.com/zT71vvXpU1
— Ministry of Railways (@RailMinIndia) March 5, 2019
தமிழர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பைக் குறைப்பது நியாயமா?

Pingback: தமிழர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பைக் குறைப்பது நியாயமா? - Athiyaman Team