Railway Recruitment 2018: Indian Railways receives 2 crore applications for one lakh posts

இரயில்வே ஆட்சேர்ப்பு 2018: இந்திய ரயில்வேக்கு ஒரு லட்சம் பதவிக்காக  2 கோடி விண்ணப்பங்களை பெற்றுள்ளது.விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் உள்ளதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ரயில்வே பணிக்கு ஒரே நேரத்தில் லட்சம் பேர் தேர்வு செய்யப்படுவதும், 2 கோடிக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

RRB சமீபத்தில் 62,907 ரெயில்வே Group D ஆன்லைன் விண்ணப்பத்திற்கான  கடைசி தேதி நீட்டியது. மார்ச் 12, 2018   வரை விண்ணப்பிக்க வேண்டும்  இது 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான எழுத்துத் தேர்வை தற்போது தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளிலும் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பிரிவினரும் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கில், ரயில்வே பணிக்கான விண்ணப்பங்களில் பல்வேற்று மாற்றங்களை செய்துள்ள ரயில்வே அமைச்சகம். இதற்கான எழுத்துத் தேர்வை அவரவர்களின் தாய்மொழியிலேயே எதிர்கொள்ளும் வகையில், இதுவரை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அமைந்திருந்த வினாத்தாள், ஹிந்தி, ஆங்கிலம், உருது, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா. கொங்கனி, மலையாளம், மணிபூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாப், தமிழ், தெலுங்கு ஆகிய 15 மொழிகளில் கேள்வித்தாள் அமைந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது.

பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் 2 ஆண்டுகள் கூடுதலாக தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொது பிரிவினர், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் என அனைவருக்கும் 2 ஆண்டுகள் கூடுதலாக தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்று அறிவிப்புக்கு முன்பு தேர்வு கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பித்தவர்களுக்கு, தேர்வுக்கான கட்டணம் ரூ.100 மட்டும் எடுத்துக்கொண்டு, மீதம் ரூ.400 திரும்ப வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

62,907 இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான வேட்பாளர்கள் விண்ணப்பப்படிவத்தை நிரப்பவும் .

RRB Group C (ALP& Technician)ஒரு பகுதியாக இந்திய ரயில்வே மூலம் மொத்தம் 26462 உதவியாளர் லோகோ பைலட் (ALP) மற்றும் டெக்னீசியன் பதவிக்காக மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Check all the details about Railway Exams

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us