RRB NTPC EXAM Postponed

RRB NTPC EXAM Postponed

என்டிபிசி சிபிடி-1 தேர்வுமுடிவு குறித்த விண்ணப்பதாரர்களின் பிரச்சினையை ஆராய உயர்மட்டக் குழுவை அமைத்தது ரயில்வே துறை
விண்ணப்பதாரர்கள் தங்களது கோரிக்கைகளை 16 பிப்ரவரி, 2022 வரை சமர்ப்பிக்கலாம்

ரயில்வே தேர்வு வாரியங்களால் 14-15 ஜனவரி, 2022-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, தொழில்நுட்பம் சாராத சாதாரண பணியிடங்களுக்கு (NTPC) கணினி வழியில் நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வின் (CBT-1) முடிவு தொடர்பாக விண்ணப்பதாரர்களால் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்துப் பரிசீலிக்க, உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு, விண்ணப்பதாரர்களால் எழுப்பப்பட்ட கீழ்காணும் பிரச்சினைகளைப் பரிசீலித்து, தனது பரிந்துரையை சமர்ப்பிக்கும்  :

  1. CEN 01/2019 (NTPC)-ன்படி நடத்தப்பட்ட   CBT முதல் நிலை தேர்வின் முடிவுகள் மற்றும் 2-ம் நிலைத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்களை தேர்வுசெய்ய பின்பற்றப்பட்ட வழிமுறைகள் குறித்து, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பரிசீலனை
  2.  CEN  RRC 01/2019-ல் CBT 2-ம் நிலையை அறிமுகம் செய்தல்

விண்ணப்பதாரர்கள், தங்களது பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை, கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்: rrbcommittee@railnet.gov.in

அனைத்து ரயில்வே தேர்வு வாரியங்களின் தலைவர்களும், விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகளைப் பெற்று,  உரிய வழிமுறையில் அவற்றைத் தொகுத்து, அதனை குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

தங்களது கோரிக்கைகளை அனுப்ப விண்ணப்பதாரர்களுக்கு 16.02.2022 வரை மூன்று வார அவகாசம் வழங்கப்படுவதுடன்,  உயர்மட்டக்குழு இவற்றைப் பரிசீலித்து தங்களது பரிந்துரையை 04.03.2022-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே,  CEN  RRC 01/2019-ன்படி  15 பிப்ரவரி 2022-ல் தொடங்க வேண்டிய CBT 2-ம் நிலைத் தேர்வும்,  CEN  RRC 01/2019-ன்படி 23 பிப்ரவரி 2022-ல் தொடங்க வேண்டிய CBT முதல்நிலைத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: