” அமிர்தசரஸ் உடன்படிக்கை
25 ஏப்ரல் 1809
- சீக்கிய பேரரசர் ரஞ்சித் சிங் மஹராஜாவுக்கும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே 1809 ஆம் ஆண்டில் அமிர்தசரஸ் உடன்படிக்கை ஏற்பட்டது.
- இந்த ஒப்பந்தம் ஒரு தலைமுறைக்கான இந்தோ – சீக்கிய உறவை முடித்து வைத்தது. ரஷ்யாவுடனான நெப்போலியனின் டில்சிட் உடன்படிக்கை (1807) மற்றும் சிஸ் – சட்லெஜ் மாநிலங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ரஞ்சித்தின் முயற்சியை தொடர்ந்து வடமேற்கு இந்தியாவிற்கு பிரெஞ்சு அச்சுறுத்தல் உடனடியாக ஏற்பட்டது.
- பிரெஞ்ச்காரர்களுக்கு எதிராக ஒரு தற்காப்பு ஒப்பந்தம் மற்றும் சட்லஜ் நதிக்கு பஞ்சாபின் கட்டுப்பாட்டை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி விரும்பின.
- இருப்பினும் இது ஒரு பாதுகாப்பான உடன்படிக்கையாக அமையவில்லை. சட்லெஜ் நதியின் கரையோரத்தினூடே பரந்து விரிந்த ரஞ்சித் மன்னனின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளுக்கு எல்லை வகுத்தது.
- இதனால் ரஞ்சித் சிங் மன்னனால் தனது எல்லையை சட்லெஜ் நதியின் தெற்கே விரிவுபடுத்த முடியவில்லை .
- மேலும், வடக்கில் முழு சுதந்திரத்தை அளித்தனர். சட்லெஜ் நதிக்கு வடக்கே பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்து, சீக்கிய பேரரசை உருவாக்கினார்.
- இந்த அரசு 1849 இல் பிரிட்டிஷ் அரசிடம் தோற்றுபோகும் வரை நீடித்தது.