டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அப்டேட்

Tnpsc latest news TNPSC Group 2 result update

டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, இந்த புதிய முறையைப் பின்பற்றி குரூப் 2/2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதைத்தொடர்ந்து இந்த புதிய முறையை அனைத்து அரசு தேர்வு வாரியங்களிலும் பின்பற்றப்படும் என்பதால், இந்த புதிய ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி குரூப் 2/2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது. குரூப் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதி பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருவதாகவும், தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ள விரும்புவோர், அவ்வப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் http://www.tnpsc.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: