தமிழ் இலக்கண இலக்கிய நூல்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் அறிஞர்களான சி.வை. தாமோதரனார் (1832-1901), உ.வே. சாமிநாதர் (1855-1942) போன்றவர்கள் தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்களை மீண்டும் கண்டறிவதற்காகத் தங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்தனர்.
சி.வை. தாமோதரனார் பனையோலைகளில் கையால் எழுதப் பெற்றிருந்த பல தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களைப் பதிப்பித்தார்.
அவர் பதிப்பித்த நூல்களில் தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம், கலித்தொகை மற்றும் சூளாமணி ஆகியவை அடங்கும்.
தமிழறிஞர் மீனாட்சி சுந்தரனாரின் மாணவரான உ.வே. சாமிநாதர் செவ்வியல் தமிழ் இலக்கிய நூல்களான
சீவகசிந்தாமணி (1887),
பத்துப்பாட்டு (1889),
சிலப்பதிகாரம் (1892),
புறநானூறு (1894),
புறப்பொருள் வெண்பா மாலை (1895),
மணிமேகலை (1898),
ஐங்குறுநூறு (1903),
பதிற்றுப்பத்து (1904)
ஆகியவற்றை வெளியிடும் முயற்சிகளை மேற்கொண்டார்.
Download TNPSC App