லாலா ஹர்தயாள் – கதார் கட்சி

  லாலா ஹர்தயாள் (14 அக்டோபர்-1884 – 4 மார்ச் 1939)

✅ லாலா ஹர்தயாள் – தேசியப் புரட்சியாளர், பலவகை கலை நிபுணர், சுதந்திரப் போராட்ட வீரர்
✅ இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களிடம் செல்வாக்கு செலுத்திய கதார் கட்சியின் முக்கிய பங்கேற்பாளராக இருந்தவர்

  லாலா ஹர்தயாள் (14 அக்டோபர்-1884 – 4 மார்ச் 1939)

தேசியப் புரட்சியாளர், பலவகை கலை நிபுணர், சுதந்திரப் போராட்ட வீரர் இந்திய சுதந்திர இயக்கத்தில் ஷியாமாஜி கிருஷ்ணவர்மா, பிகாய்ஜி காமா ஆகியோருடன் இணைந்திருந்தவர் .

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கவுரவம் மிக்க இரண்டு கல்வி உதவித் தொகையையும், இந்திய சிவில் சேவை பதவியையும் நிராகரித்தவர்

இந்திய சுதந்திரம் தொடர்பாக முன்னணி செய்தி ஏடுகளில் கட்டுரை எழுதியவர் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களிடம் செல்வாக்கு செலுத்திய கதார் கட்சியின் முக்கிய பங்கேற்பாளராக இருந்தவர்

இந்திய மக்களை அணி திரட்டி அவர்கள் விடுதலை இயக்கத்தின் பகுதியாக இருக்க ஊக்கப்படுத்தியவர்

1939 மார்ச் 4 அன்று உயிரிழந்தார்

Image

 

டெல்லியில் உள்ள சீராகானா என்ற பகுதியில் (1884) பிறந்தார். உருது, பாரசீக மொழிகளில் பண்டிதரான அப்பா, தன் மகனுக்கு நல்ல கல்வி கிடைக்க ஏற்பாடு செய்தார். துளசி தாசரின் ராமசரிதமானஸ் மற்றும் புராணங்களைத் தாயிடம் கற்றார்.

*டெல்லி செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல் லூரியில் சமஸ்கிருதத்தில் பட்டம் பெற் றார். பஞ்சாப், லாகூரில் பயின்று சமஸ் கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற் றார். அசாதாரண நினைவாற்றல் கொண்டவர். தேசபக்தி மிக்கவர்.

*லாகூரில் செயல்பட்ட கிறிஸ்தவ இளைஞர்கள் அமைப்பின் செயலருடன் ஒரு பிரச்சினையில் இவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, இளைஞர்களை ஒன்றுதிரட்டி ‘இந்தியா அசோசியேஷன்’ அமைப்பைத் தொடங்கினார். லாலா லஜபதிராய் உள்ளிட்ட பலர் இதில் இடம்பெற்றிருந்தனர்.

*எம்.ஏ. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றதால் பஞ்சாப் அரசின் உதவித்தொகை கிடைத்தது. லண்டன் சென்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு ‘பொலிடிகல் மிஷனரி’ என்ற அமைப்பைத் தொடங்கினார். ஆங்கில அரசின் உதவித்தொகையில் படிக்கப் பிடிக்காமல், பாதியிலேயே நாடு திரும்பினார்.

*‘பஞ்சாப்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையைத் தொடங்கினார். இவரது செல்வாக்கு அதிகரித்ததால் ஆங்கில அரசு மிரண்டது. இவரைக் கைது செய்ய அரசு தயாராவதை உணர்ந்த லாலா லஜபதிராய், இவரை வற்புறுத்தி பாரீஸுக்கு அனுப்பிவைத்தார். கர்ப்பமாக இருந்த மனைவியைப் பிரிந்து சென்றவர், அதன்பிறகு பிறந்த மகளின் முகத்தை இறுதிவரை பார்க்கவே இயலவில்லை.

*பாரீஸில் ‘வந்தேமாதரம்’, ‘தல்வார்’ ஆகிய பத்திரிகைகள் தொடங்கினார். 1910-ல் அங்கிருந்து அமெரிக்கா சென்றார். அங்கு இவரும் சிலரும் இணைந்து ‘கதர்’ (Ghadar) என்ற பத்திரிகையை வெளியிட்டனர். இவர்கள் ஒன்றிணைந்து 1913-ல் அமெரிக்க பசிபிக் பிராந்திய ஹிந்த் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினர். பத்திரிகையின் பெயரிலேயே கட்சி பிரபலம் அடைந்ததால், ‘கதர் கட்சி’ என்று குறிப்பிடப்பட்டது.

*மராட்டி, வங்காளம், ஆங்கிலத்தில் ‘கதர்’ பத்திரிகை வெளிவந்தது. பல நாடுகளிலும் இதன் கிளைகள் விரிந்தன. இந்தியாவில் ஆங்கில அரசு கட்டவிழ்த்துவிட்ட கொடுமைகளை இது உலகுக்கு அம்பலப்படுத்தியது. உலகின் கவனம் இந்தியா பக்கம் திரும்பியது. கதர் கட்சியின் பொதுச் செயலாளராக செயல்பட்டார். முதல் உலகப்போர் தொடங்கியபோது, ஸ்டாக்ஹோமில் இந்திய தத்துவவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

*அமெரிக்காவுக்கு 1920-ல் சென்றவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றினார். இந்தியா விடுதலை பெற ஆயுதப் புரட்சிக்கான முனைப்புகளை மேற்கொண்டார். காகோரி ரயில் கொள்ளை வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு, இவரை இந்தியா கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது ஈடேறவில்லை.

*கதர் கட்சியின் முயற்சியால், ஜெர்மனியில் இருந்து வங்கத்துக்கு 2 கப்பல்களில் ஆயுதங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. உளவாளிகள் காட்டிக்கொடுத்ததால் அவை வழியிலேயே பறிமுதல் செய்யப்பட் டன. நாடுவிட்டு நாடு பயணம், போராட்டங்களுக்கு இடையில் தனது அனுபவங்கள், கருத்துகளை எழுதிவந்தார்.

*இந்தியா திரும்ப வேண்டும் என்ற இவரது ஆசை இறுதிவரை நிறை வேறவில்லை. பல்வேறு நாடுகளுக்குச் சென்று இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டிய லாலா ஹர்தயாள், அமெரிக்கா வின் ஃபிலடல்பியாவில் 55-வது வயதில் (1939) மறைந்தார்.

Lala Hardayal

New Delhi, Delhi

 

Lala Hardayal, was born on October 14, 1884, the 6th child of a large Kayastha Mathur family in Delhi, to Gauri Dayal Mathur, a district court reader and Bholi Rani. Influenced by the ideals of the Arya Samaj at an early age, his other influences included Mazinni, the great Italian revolutionary leader, Karl Marx and Mikhail Bakunin, the Russian anarchist. He later graduated in Sanskrit from St.Stephen’s and also did his Post Graduation in the same subject from Punjab University. An academically brilliant student, he got 2 scholarships from Oxford in 1905 for higher studies in Sanskrit.

In a letter to The Indian Sociologist, published in 1907, he started to explore anarchist ideas, arguing that “our object is not to reform government, but to reform it away, leaving, if necessary only nominal traces of its existence.” The letter led to him being put under surveillance by the police. Later that year, saying “To Hell with the ICS”, he gave up the prestigious Oxford scholarships and returned to India in 1908 to live a life of austerity. But in India too, he started writing harsh articles in the leading newspapers, When the British government decided to censor his works, Lala Lajpat Rai advised him to leave and go abroad.

Although its attempts at overthrowing the British Raj were unsuccessful, the insurrectionary ideals of the Ghadar Party, of which Lala Hardayal was a key participant, influenced members of the Indian Independence Movement opposed to Gandhian nonviolence. He also mobilized Indians of the diaspora and encouraged them to be part of the freedom movement.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: