ஷாஹித் உதம்சிங் -13 மார்ச் 1940

இங்கிலாந்தில் மைக்கல் ஓ’டவையரை உதம்சிங் சுட்டு கொன்றார். 13 மார்ச் 1940 

13 மார்ச் 1940-ல் ஷாஹித் உதம்சிங் மைக்கல் ஓ’ட்வையரை இங்கிலாந்தில் சுட்டு கொன்றார்.

அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 1,000-க்கும் மேற்பட்ட நிராயுதபாணிகள் பலியான ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடைபெற்ற போது பஞ்சாப் மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக மைக்கல் ஓ’ட்வையர் இருந்தார்.

இந்த படுகொலைக்கு பழிவாங்கும் எண்ணத்துடன் புரட்சியாளரான உதம்சிங் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக உறுதியாக இருந்தார். அவரது ஒரே குறிக்கோள் மைக்கல் ஓ’ட்வையரை கொலை செய்வது. இந்த குறிக்கோளை அடைவதற்கு அவர் பல கண்டங்கள் தாண்டி இங்கிலாந்து வந்தடைந்தார்.

தாக்குதலுக்கான சரியான நேரத்திற்காகவும் வாய்ப்பிற்காகவும் காத்திருந்தார்.

விசாரணையின் போது அவர் கூறுகையில்,”எனக்கு மரணத்தை கண்டு பயமில்லை. எனது நாட்டிற்காக தான் நான் இறக்கிறேன்.

ஆங்கிலேய ஆட்சியில் பல பேர் பசியால் வாடியதை நான் பார்த்திருக்கிறேன்.

இதற்க்கு எதிராக நான் போராடியுள்ளேன், இது எனது கடமை. எனது தாய் நாட்டிற்காக இறப்பதை விட பெரிய கௌரவம் வேறு என்ன எனக்கு கிடைக்கப்போகிறது.

Image

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: