இந்தியாவும் எல்லைகளும்

இந்தியாவும் எல்லைகளும்

இந்தியாவின் நில எல்லை 15106.7 கி.மீ நீளமுடையது.  இந்தியாவின் 17 மாநிலங்கள் நில எல்லையைக் கொண்டதாகும். இந்தியாவில் 7516.6 கி.மீ நீளத்திற்கு கடற்கரை உள்ளது.  13 மாநிலங்கள் கடற்கரை உடையனவாகும்.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், டெல்லி, ஹரியானா ஆகிய 5 மாநிலங்கள் தவிர்த்து ஏனைய மாநிலங்கள் பன்னாட்டு எல்லை அல்லது கடற்கரையைக் கொண்டுள்ள எல்லை மாநிலங்களாகும்.

இந்தியாவின் எல்லை நிர்வாகம் உள்துறை அமைச்சகத்தின் (Ministry of Home Affairs) கீழ் செயல்படும் எல்லை மேலாண்மைத் துறையின் (Department of Border Management) பணியாகும்.

வ.எண் நாடு நில எல்லையின் நீளம் (கி.மீ)
1.     வங்கதேசம் 4096.7
2.     சீனா 3488
3.     பாகிஸ்தான் 3323
4.     நேபாளம் 1751
5.     மியான்மர் 1643
6.     பூடான் 699
7.     ஆப்கானிஸ்தான் 106
  மொத்தம் 15106.7

இந்திய எல்லைக் கோடுகளின் பெயர்கள்

இந்தியா என்ற நவீன நாடு ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது எனலாம். பெரும்பாலான எல்லைக் கோடுகளை வரைந்தவர்களும் அவர்களே தான். சொல்லப்போனால் இன்றைய சில எல்லைச் சிக்கல்களுக்கும் அவர்களது ஒப்பந்தங்களே காரணமாகின்றன. அந்த எல்லைக் கோடுகளின் பெயர்களைத் தெரிந்து கொள்வது சிக்கலைப் புரிந்துக் கொள்ள வழிவகுக்கும்.

வ.எண் அண்டை நாட்டின் பெயர் எல்லைக் கோட்டின் பெயர்
1.     பாகிஸ்தான் ரெட் கிளிஃப் கோடு (3323 கி.மீ)
2.     வங்கதேசம் புர்பச்சால் (4096.7 கி.மீ)
3.     சீனா மெக்மோகன் கோடு (3380கி.மீ)
4.     பூடான் இந்தோ-பூடான் (699 கி.மீ)
5.     ஆப்கானிஸ்தான் துரந்த் கோடு (106 கி.மீ)
6.     இலங்கை பாக் சலசந்தி (30.கி.மீ)
7.     மியான்மர் இந்தோ-பர்மா எல்லை (1643 கி.மீ)
8.     நேபாளம்  எல்லைக் கோடு (1236 கி.மீ)

இதில் இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினைக்குக் காரணமான கோடு மெக்மோகன் கோடாகும். இந்த மெக்மோகன் கோடு அக்சய்-சின் (Aksai – Chin) என்றறியப்படும் பகுதியை சீனாவினுடையதாகக் காட்டக்கூடியது. சீனா இந்தக் கோட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் இந்தியா, ஜான்சன் கோடு என்ற எல்லையை முன்வைக்கிறது. ஜான்சன் கோட்டின்படி அக்சய்-சின் இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாகும்.

  • ராட்க்ளிஃப் கோடு
    • இது குஜராத்தில் உள்ள ரான் ஆஃப் கட்ச் வழியாக ஜம்மு & காஷ்மீரில் உள்ள ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லை வரை பரவி, இந்தியாவையும் பாகிஸ்தானையும் இரண்டு வெவ்வேறு நாடுகளாகப் பிரிக்கிறது. எனவே, விருப்பம் 3 சரியானது.
    • ராட்க்ளிஃப் இந்தியாவை மூன்று பகுதிகளாகப் பிரித்தார்: மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியா.
    • இது அப்போதைய எல்லை கமிஷன் தலைவர் சர் சிரில் ராட்க்ளிஃப்பின் பெயரிடப்பட்டது. இவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞராக இருந்தார், அவருக்கு வரைபடத்தில் முந்தைய அறிவோ அனுபவமோ இல்லை.
    • இந்த எல்லைக்கோடுதான் இன்று மேற்குப் பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயும், கிழக்குப் பகுதியில் இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையிலான சர்வதேச எல்லையாகும்.
    • இந்தியப் பிரிவினையின் போது 1947 ஆகஸ்ட் 17 அன்று எல்லைக் கோடு வெளியிடப்பட்டது​.
    • சர்வதேச எல்லைக் கோடுஇடையே உள்ள நாடுகள்/மாநிலங்கள்

      ராட்கிளிஃப் கோடு

      இந்தியா – பாகிஸ்தான் – பங்களாதேஷ், 17 ஆகஸ்ட் 1947

      எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LOC)

      இந்தியா மற்றும் பாகிஸ்தான், 3 ஜூலை 1972

      மெக்-மோகன் லைன்

      இந்தியா – சீனா, 1914 சிம்லா மாநாடு

      உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC)

      இந்தியா மற்றும் சீனா, 1959

      துராந்து எல்லைக்கோடு

      பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான், 1893

border-line 647 081716105940

சர்வதேச எல்லைக் கோடு இடையே உள்ள நாடுகள்/மாநிலங்கள்
ராட்கிளிஃப் கோடு இந்தியா – பாகிஸ்தான் – பங்களாதேஷ், 17 ஆகஸ்ட் 1947
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LOC) இந்தியா மற்றும் பாகிஸ்தான்,  3 ஜூலை 1972
மெக்-மோகன் லைன் இந்தியா – சீனா, 1914 சிம்லா மாநாடு
உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) இந்தியா மற்றும் சீனா, 1959
துராந்து எல்லைக்கோடு பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான், 1893

இந்தியாவின் எல்லை பற்றிய தகவல்கள்:

  1. இந்திய 7 நாடுகளுடன் தனது நில எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. அவை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா, பூடான், நேபாளம், மியான்மர் மற்றும் வங்காளதேசம் ஆகியவை ஆகும்.
  2. இந்தியா தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மிகப்பெரிய நாடு சீனா.
  3. இந்தியா தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மிக சிறிய நாடு பூடான்.
  4. இந்தியா வங்காள தேசத்துடன் தான் மிக நீளமான எல்லையைக் கொண்டுள்ளது. (சுமார் 4,096.7 கி.மீ). மிகக் குறைந்த எல்லையைக் கொண்டுள்ள நாடு ஆப்கானிஸ்தான் (சுமார் 106 கி.மீ).
  5. மிக அதிக நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலம் ஜம்மு-காஷ்மீர்.
  6. மிக அதிக மாநிலங்களுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலம் – உத்திரப்பிரதேசம் (எட்டு மாநிலங்கள்).
  7. ஒரேயொரு மாநிலத்துடன் மட்டும் எல்லையைக் கொண்டுள்ள இந்திய மாநிலங்கள் சிக்கிம் (மேற்கு வங்காளம்) மற்றும் மேகாலயா (அஸ்ஸாம்)
    கடற்பரப்பு.
  8. இந்தியாவில் எட்டு மாநிலங்கள் கடற்கரை பரப்பு பெற்றுள்ளன. அவை குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிஷா மற்றும் மேற்கு வங்காளம்.
  9. மிக அதிகமான கடற்கரை பெற்றுள்ள மாநிலம் குஜராத்.

 

1 இந்தியா-சீனா எல்லை கோடு பெயர் என்ன?

விடை: மெக்மோகன் எல்லைக் கோடு

2. இந்தியா-பாகிஸ்தான் எல்லை கோடு பெயர் என்ன?

விடை: ரெட் கிளிஃப் எல்லைக் கோடு

3. இந்திய-வங்கதேச எல்லைக் கோடு பெயர் என்ன?

விடை: புர்பச்சால் எல்லைக் கோடு

4. இந்தியா-பூடான் எல்லைக்கோடு பெயர் என்ன?

விடை: இந்தோ-பூடான் எல்லைக் கோடு

5. இந்தியா-ஆப்கானிஸ்தான் எல்லைக்கோடு பெயர் என்ன?

விடை: துரந்த் கோடு

6. இந்தியா-இலங்கை எல்லை கோடு பெயர் என்ன?

விடை: பாக் சலசந்தி

7. இந்தியா-மியான்மர் எல்லை கோடு பெயர் என்ன?

விடை: இந்தோ-பர்மா எல்லை

8. இந்தியா-நேபாளம் எல்லை கோடு பெயர் என்ன?

விடை: எல்லை கோடு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading