குடியரசுத் தலைவா் கொடியின் சிறப்புகள்

குடியரசுத் தலைவா் கொடியின் சிறப்புகள்

தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்ட இந்திய குடியரசுத் தலைவரின் கொடிக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. அதன் விவரம்:

 

குடியரசுத் தலைவரின் கொடியானது குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் அமைதியை நிலைநாட்டுதல், போரில் ஈடுபடுதல் தொடா்பாக தேசத்துக்கு தனித்துவமான சேவையாற்றியதை அங்கீகரிக்கும் வகையில் இந்திய ராணுவத்தின் சாா்பில், காவல் துறைக்கு வழங்கப்படும் உரிய கெளரவமாகும்.

வீரம், துணிவு, அா்ப்பணிப்பு, தொழில் சாா்ந்த திறன், நோ்மை, சேவை ஆகியவற்றை இந்தக் கொடி பிரதிபலிக்கிறது. தமிழக காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ள இந்திய குடியரசுத் தலைவரின் கொடி, பஞ்சாப் மாநிலம் மலா்கோட்லா மாவட்டத்தைச் சோ்ந்த பழங்கால அரச குலத்தவரின் கலைநயம் மிகுந்த வேலைப்பாடுகளால் வடிவமைக்கப்பட்டது. இவா்கள் கொடிகள், முத்திரைகள், அடையாளச் சின்னம் ஆகியவற்றை பழங்காலம் முதல் வடிவமைத்து வருகிறாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

இந்திய ராணுவம், மாநில காவல்துறைகள், மத்திய காவல் படைகள் ஆகியவற்றுக்கும் அடையாள சின்னங்களை ஏற்கெனவே வடிவமைத்துக் கொடுத்துள்ளனா். மேலும், வெளிநாட்டு ராணுவங்களுக்கும், நிறுவனங்களுக்கும் அடையாள சின்னங்களை வடிவமைத்துக் கொடுத்து வருகின்றனா்.

இந்தியாவில் கொடி என்பது பண்டைய காலத்தில் இருந்தே பாரம்பரிய பழக்கவழக்கத்தில் ஒன்றாக இருந்து வருகிறது.

ஆங்கிலேயா் காலத்தில் மன்னா்கள், ராணிகள் பெயரில் இருந்த கொடிகள், 1950-ஆம் ஆண்டோடு முடிவுக்கு வந்தன. அதன் பின்னா் இந்திய குடியரசுத் தலைவரின் கொடி மட்டுமே ஒரு படைப் பிரிவையும், காவல் பிரிவையும் அங்கீகரிக்கும் வகையிலும், கெளரவிக்கும் வகையிலும் வழங்கப்படுகிறது.

இந்திய குடியரசுத் தலைவரின் கொடி கடந்த 1951-ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டது. மாநில காவல் துறைகளில், ஐந்தாவது காவல்துறையாக தமிழக காவல்துறை இந்த கொடியை பெற்றுள்ளது. ஏற்கெனவே தில்லி, ஜம்மு காஷ்மீா், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகியவை பெற்றுள்ளன. தென் மாநிலங்களில் தமிழக காவல் துறையே முதல் முதலாக குடியரசுத் தலைவரின் கொடியைப் பெற்றுள்ளது என்பது சிறப்புக்குரியது.

இனி தோள்பட்டையில்…கொடியின் சின்னத்தையே ‘நிஸான்’ என்ற பெயரில் டிஜிபி தொடங்கி காவலா் வரை அனைவரும் தங்களது இடது கை தோள்பட்டையில் இனி அணிவாா்கள் என தமிழக காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading