12th Tamil Book– Book Back Answers
இளந்தமிழே
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின் Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO தேர்விற்கு பயன்படும். எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள் இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்
இளந்தமிழே
இலக்கணக் குறிப்பு
- செந்தமிழ், செந்நிறம், செம்பரிதி – பண்புத்தொகைகள்
- சிவந்து – வினையெச்சம்
- வியர்வைவெள்ளம் – உருவகம்
- முத்துமுத்தாய் – அடுக்குத்தொடர்
உறுப்பிலக்கணம்
1. சாய்ப்பான் = சாய் + ப் + ப் + ஆ ன்
- சாய் – பகுதி
- ப் – சந்தி
- ப் – எதிர்கால இடைநிலை
- ஆன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி.
2. விம்முகின்ற = விம்மு + கின்று + அ
- விம்மு – பகுதி
- கின்று – நிகழ்கால இடைநிலை,
- அ – பெயரெச்ச விகுதி.
3. வியந்து = விய + த் (ந்) + த் + உ
- விய – பகுதி, த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
4. இருந்தாய் = இரு + த் (ந்) + த் + ஆய்
- இரு – பகுதி,
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.
புணர்ச்சி விதி
1. செம்பரிதி = செம்மை + பரிதி
- “ஈறு போதல்” என்ற விதிப்படி “செம்பரிதி” என்றாயிற்று
2. வானமெல்லாம் = வானம் + எல்லாம்
- “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “வானமெல்லாம்” என்றாயிற்று
3. உன்னையல்லால் = உன்னை + அல்லால்
- “இஈஐ வழி யவ்வும்” என்ற விதிப்படி “உன்னை + ய் + அல்லால்” என்றாயிற்று
- “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “உன்னையல்லால்” என்றாயிற்று
4. செந்தமிழே = செம்மை + தமிழே
- “ஈறு போதல்” என்ற விதிப்படி “செம் + தமிழே” என்றாயிற்று
- “முன்னின்ற மெய் திரிதல்” என்ற விதிப்படி “செந்தமிழே” என்றாயிற்று
பலவுள் தெரிக
2. “மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,
௧) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
௨) பொதிகையில் தோன்றியது
௩) வள்ளல்களைத் தந்தது
- க மட்டும் சரி
- ௧, ௨ இரண்டும் சரி
- ௩ மட்டும் சரி
- ௧, ௩ இரண்டும் சரி
விடை : ௧, ௩ இரண்டும் சரி
இளந்தமிழே! – கூடுதல் வினாக்கள்
இலக்கணக் குறிப்பு
- வியந்து, ஈன்று, கூவி, உடைத்து – வினையெச்சங்கள்
- தமிழ்க்குயில் – உருவகம்
உறுப்பிலக்கணம்
தாந்தாய் = தா (த) + த் (ந்) + த் + ஆய்
- தா – பகுதி
- த – ஆனது விகாரம்
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.
புணர்ச்சி விதி
1. வீற்றிருக்கும் = வீற்று + இருக்கும்
- “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” என்ற விதிப்படி “ வீற்ற் + இருக்கும்” என்றாயிற்று
- “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “வீற்றிருக்கும்” என்றாயிற்று
2. எம்மருமை = எம் + அருமை
- “தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும்” என்ற விதிப்படி “ எம்ம் + அருமை” என்றாயிற்று
- “உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” என்ற விதிப்படி “எம்மருமை” என்றாயிற்று
3. செந்நிறம் = செம்மை + நிறம்
- “ஈறு போதல்” என்ற விதிப்படி “செம் + நிறம்” என்றாயிற்று
- “முன்னின்ற மெய் திரிதல்” என்ற விதிப்படி “செந்நிறம்” என்றாயிற்று
பலவுள் தெரிக
1. “பொதிகை” என்பது எந்த மலையைக் குறிக்கும்?
- விந்திய மலை
- குற்றால மலை
- இமய மலை
- சாமி மலை
விடை : குற்றால மலை
2. சிற்பி பாலசுப்பிரமணியம் எந்நூலை மொழிபெயர்த்தமைக்காக சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்?
- அக்கினி சாட்சி
- அக்கினி
- சாட்சி
- சூரியநிழல்
விடை : அக்கினி சாட்சி
3. கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற படைப்பு
- ஒரு கிராமத்தின் கதை
- ஒரு புளியமரத்தின் கதை
- ஒரு நகரத்தின் கதை
- ஒரு கிராமத்தின் நதி
விடை : ஒரு கிராமத்தின் நதி
4. பாண்டியரின் சஙகத்தில் கொலுவிருந்தவள்
- கோப்பெருந்தேவி
- தமிழன்னை
- வேண்மார்
- ஒளவையார்
விடை : தமிழன்னை
5. எம்மருமைச் செந்தமிழே! உன்னையல்லால் ஏற்றதுணை வேறுண்டோ- என்று பாடியவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- சுரதா
- சிற்பி பாலசுப்பிரமணியம்
விடை : சிற்பி பாலசுப்பிரமணியம்
Tamil Nadu 6th -12 TAMIL Book Back Answers
Download TNPSC App