Tamil Nadu 6th Standard New கணியனின் நண்பன் Tamil Book Term 1
Book Back Answers
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின் Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO தேர்விற்கு பயன்படும். எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள் இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்
6th Tamil New Book Term 1 கணியனின் நண்பன் Book Back Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. நுட்பமாகச் சிந்தித்து அறிவது _________________
- நூலறிவு
- நுண்ணறிவு
- சிற்றறிவு
- பட்டறிவு
விடை : நுண்ணறிவு
2. தானே இயங்கும் இயந்திரம் _______________.
- கணினி
- தானியங்கி
- அலைபேசி
- தொலைக்காட்சி
விடை : தானியங்கி
3. நின்றிருந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- நின் + றிருந்த
- நின்று + இருந்த
- நின்றி + இருந்த
- நின்றி + ருந்த
விடை : நின்று + இருந்த
4. அவ்வுருவம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
- அவ்வு + ருவம்
- அ + உருவம்
- அவ் + வுருவம்
- அ + வுருவம்
விடை : அ + உருவம்
5. மருத்துவம் + துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _________
- மருத்துவம்துறை
- மருத்துவதுறை
- மருந்துதுறை
- மருத்துவத்துறை
விடை : மருத்துவத்துறை
6. செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது__________
- செயலிழக்க
- செயல்இழக்க
- செயஇழக்க
- செயலிலக்க
விடை : செயலிழக்க
7. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் _______________________
- போக்குதல்
- தள்ளுதல்
- அழித்தல்
- சேர்த்தல்
விடை : சேர்த்தல்
8. எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல் _______________________
- அரிது
- சிறிது
- பெரிது
- வறிது
விடை : அரிது
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை ___________________
விடை : எந்திரங்கள்
2. தானியங்கிகளுக்கும், எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு ___________________
விடை : செயற்கை நுண்ணறிவு.
3. உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் ___________________
விடை : டீப் புளூ.
4. ‘சோபியா’ ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு ___________________
விடை : சவுதி அரேபியா
III. சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. தொழிற்சாலை
விடை : தொழிற்சாலை என்பது மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதாகும்
2. உற்பத்தி
விடை : சோப்பு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் எங்கள் ஊரில் உள்ளது
3. ஆய்வு
விடை : ஆய்வு என்பது ஒரு தேடல் வகை
4. செயற்கை
விடை : மனிதர்கள் விசாயத்தில் செயற்கை உரங்களை பயன்படுத்துகின்றன
5. நுண்ணறிவு
விடை : மனிதர்கள் நுண்ணறிவால் சிந்திக்கின்றனர்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. மனித ஆற்றல் குறையைப் போக்க மனிதன் கண்டுபிடித்தவையே ___________________
விடை : தானியங்கிகள்
2. ‘நான் ஓர் எந்திரமனிதன் . என்னை __________________ என்றும் அழைப்பார்கள்
விடை : ’ரோபோ’
3. ஐக்கிய நாடுகள் சபை _______________________ என்னும் பட்டத்தைச் சோபியாவுக்கு வழங்கியுள்ளது.
விடை : ‘புதுமைகளின் வெற்றியாளர்’
4. _______________________, _________________________ மனிதரை விட விரைவாகத் தானே செய்துமுடிக்கும் எந்திரமே தானியங்கி ஆகும்
விடை : நுட்பமான, கடினமான, ஒரே மாதிரியான வேலைகளை
5. சூழ்நிலைகளை உணர்வதற்கான ___________________ ஆகியவற்றுடன் உருவாக்கப்படுகின்றன
விடை : நுண்ணுணர்வுக் கருவிகள் ( Sensors)
6. தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் தானியங்கிகள் __________________, ___________________ போன்ற பணிகளைச் செய்கின்றன.
விடை : உற்பத்தி செய்தல், பழுதுகளை நீக்குதல்
7. எந்திர மனிதர்களுக்கும் தானியங்கிகளுக்கும் உள்ள வேறுபாடு ___________________ ஆகும்
விடை : செயற்கை நுண்ணறிவு
8. சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ள ரோபோவின் பெயர் __________________
விடை : ‘சோபியா’.