Tamil Nadu 6th Standard New சிலப்பதிகாரம் Tamil Book Term 1
Book Back Answers
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின் Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO தேர்விற்கு பயன்படும். எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள் இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்
6th Tamil New Book Term 1 சிலப்பதிகாரம் Book Back Answers
I. சொல்லும் பொருளும்
திங்கள் – நிலவு
கொங்கு – மகரந்தம்
அலர் – மலர்தல்
திகிரி – ஆணைச்சக்கரம்
பொற்கோட்டு – பொன்மயமானசிகரத்தில்
மேரு – இமயமலை
நாமநீர் – அச்சம் தரும் கடல்
அளி – கருணை
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. கழுத்தில் சூடுவது ______________
தார்
கணையாழி
தண்டை
மேகலை
விடை : தார்
2. கதிரவனின் மற்றொரு பெயர் ______________
புதன்
ஞாயிறு
சந்திரன்
செவ்வாய்
விடை : ஞாயிறு
3. வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
வெண் + குடை
வெண்மை + குடை
வெம் +குடை
வெம்மை + குடை
விடை : வெண்மை + குடை
4. பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
பொன் + கோட்டு
பொற் + கோட்டு
பொண் + கோட்டு
பொற்கோ + இட்டு
விடை : பொன் + கோட்டு
5. கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________
கொங்குஅலர்
கொங்அலர்
கொங்கலர்
கொங்குலர்
விடை : கொங்கலர்
6. அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ______________
அவன்அளிபோல்
அவனளிபோல்
அவன்வளிபோல்
அவனாளிபோல்
விடை : அவனளிபோல்
III. நயம் அறிக
1. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
போற்றுதும் – போன்று
மேரு – மேல்
திகரி – திரிதலான்
அவன் – அளிபோல்
2. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக
திங்களை – கொங்கு
போற்றுத் – பொற்கோட்டு
அலர்தார்ச் – உலகு
மாமழை – நாம
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் _________________
விடை : இளங்கோவடிகள்.
2. இளங்கோவடிகள் _________________ சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
விடை : சேர மன்னர் மரபைச்
3. ‘சென்னி’ என்பது _________________ -க் குறிக்கும் பெயர்.
விடை : சோழனை
4. “திகிரி” என்பது குறிக்கும் பொருள் _________________
விடை : சக்கரம்
5. ‘நாம’ என்னும் சாெல் உயர்த்தும் பொருள் _________________
விடை : அச்சம்
II. பிரித்து எழுதுக
வானிலிருந்து – வானில் + இருந்து
சிலப்பதிகாரம் – சிலம்பு + அதிகாரம்
மாமழை – மா + மழை
மேனின்று – மேல்+நின்று
அங்கண் – அம்+கண்
III. பாெருத்துக
1. குடை ஞாயிறு
2. சக்கரம் மழை
3. அருள் திங்கள்
விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ