Tamil Nadu 6th Standard New கல்விக்கண் திறந்தவர் Tamil Book Term 2
Book Back Answers
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின் Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO தேர்விற்கு பயன்படும். எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள் இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்
6th Tamil New Book Term 2 கல்விக்கண் திறந்தவர் Book Back Answers
I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் _________.
- ஆடு மேய்க்க ஆள் இல்லை
- ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
- வழி தெரியவில்லை
- பேருந்து வசதியில்லை
விடை : ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
2. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- பசி + இன்றி
- பசி+யின்றி
- பசு + இன்றி
- பசு + யின்றி
விடை : பசி + இன்றி
3. காடு+ஆறு என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- காட்டாறு
- காடாறு
- காட்டுஆறு
- காடுஆறு
விடை : காட்டாறு
4. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- படி + அறிவு
- படிப்பு + அறிவு
- படி + அறிவு
- படிப்பு + வறிவு
விடை : படிப்பு + அறிவு
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்கச் _______________ அறிமுகப்படுத்தினார்
விடை : சீரூடைத் திட்டத்தை
2. காமராசரை ‘கல்விக் கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர் ____________________
விடை : தந்தை பெரியார்
III. சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. வகுப்பு
விடை : அருண் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றான்
2. உயர்கல்வி
விடை : உயர்கல்வி பயில ராமு சென்னைக்கு சென்றான்.
3. சீருடை
விடை : பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றி பயில பள்ளிக்கு சீருடையில் தான் வரவேண்டும்.
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. ………………………… என தந்தை பெரியாரால் காமராசர் பாரட்டப்பட்டார்.
விடை : கல்விக்கண் திறந்தவர்
2. காமராசரின் சிறப்புப்பெயர் .……………………………..
விடை : கருப்புகாந்தி
3. காமராசர் உள்நாட்டு விமானநிலையம் .…………………………….. அமைந்துள்ளது
விடை : சென்னையில்
4. நடுவணரசு .……………………………..-ம் ஆண்டு பாரதரத்னா விருதினை வழங்கியது
விடை : 1976
5. காமராசர் முதல் அமைச்சராக பதவியேற்ற நேரத்தில் ஏறக்குறைய .……………………. தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.
விடை : 6000
II. பிரித்தெழுதுக
- ஏற்றத்தாழ்வு = ஏற்றம் + தாழ்வு
- பெருந்தலைவர் = பெருமை + தலைவர்
- அரசுடமை = அரசு + உடமை