Tamil Nadu 6th Standard New கண்மணியே கண்ணுறங்குTamil Book Term 2
Book Back Answers
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து சமச்சீர் பாடப் புத்தகங்ளின் Book Back Questions (Samacheer Book Back Question Pdf) இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் உள்ள பாடப் புத்தகங்களின் தொகுப்பு கீழே உள்ள லிங்க் இல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC டிஎன்பிஎஸ்சி குரூப் 2 குரூப்-1 குரூப்-2 குரூப்-4 , VAO தேர்விற்கு பயன்படும். எந்த தேர்வுக்கு தயாராகும் போதும் அதற்கான பாடத்திட்டத்தின் வினாக்களை( Samacheer book Questions ) இந்த பக்கத்தில் படித்துக் கொள்ளலாம் . மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB ) நடத்தும் கான்ஸ்டபிள் மற்றும் SI தேர்விற்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் நடத்தும் பேப்பர் 1 மற்றும் பேப்பர் 2 பாடத்திட்டங்கள் இந்த பாடப்புத்தகங்கள் பயன்படும்
6th Tamil New Book Term 2 கண்மணியே கண்ணுறங்கு Book Back Answers
I. சொல்லும் பொருளும்
- நந்தவனம் – பூஞ்சோலை
- பார் – உலகம்
- பண் – இசை
- இழைத்து – செய்து
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- பாட்டி + சைத்து
- பாட்டி + இசைத்து
- பாட்டு + இசைத்து
- பாட்டு+சைத்து
விடை : பாட்டு + இசைத்து
2. கண்ணுறங்கு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது _______
- கண் + உறங்கு
- கண்ணு + உறங்கு
- கண் + றங்கு
- கண்ணு + றங்கு
விடை : கண் + உறங்கு
3. வாழை + இலை என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- வாழையிலை
- வாழைஇலை
- வாழலை
- வாழிலை
விடை : வாழையிலை
4. கை + அமர்த்தி என்னும் சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
- கைமர்த்தி
- கைஅமர்த்தி
- கையமர்த்தி
- கையைமர்த்தி
விடை : கையமர்த்தி
5. உதித்த என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல்________
- மறைந்த
- நிறைந்த
- குறைந்த
- தோன்றிய
விடை : மறைந்த
I. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. “பார்” என்ற சொல்லின் பொருள் _______________
விடை : உலகம்
2. _______________ என்ற சொல்லின் பொருள் இசை
விடை : “பண்”
3. “தால்” என்னும் சொல் தரும் பொருள் ____________
விடை : நாக்கு
4. தாலாட்டு _____________________ ஒன்று
விடை : வாய்மொழி இலக்கியங்களுள்
5. குழந்தையின் ____________, குழந்தைகளை ____________ பாடும் பாட்டு தாலாட்டு
விடை : அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும்
II. சேர்த்து எழுதுக
- மூன்று + தேன் = முத்தேன்
- மூன்று + கனி = முக்கனி
- மூன்று + தமிழ் = முத்தமிழ்
- பூ + சோலை = பூஞ்சோலை
- நன்மை + தமிழ் = நற்றமிழ்
III. “கண்மணியே கண்ணுறங்கு” பாடலில் உள்ள எதுகை. மோனைச் சொற்களை எடுத்து எழுதுக
மோனைச் சொற்கள் | எதுகைச் சொற்கள் |
நந்தவன் – நற்றமிழ் | கண் – பண் |
பாட்டிசைத்து – பார் | தொட்டில் – கட்டி |
தந்தத்திலே – தங்கத்திேல | வைக்கும் – முக்கனி |
குளிக்க – குளம் | வெட்டி – கட்டி |
கண்ணே – கண்ணுறங்கு | கண்ணே – கண்ணுறங்கு |
IV. வினாக்கள்
1. முந்நாடுகளின் சிறப்புகள் எவையென தாய் கூறுகின்றாள்?
- சேரநாடு – முத்து
- சோழ நாடு – முக்கனி
- பாண்டிய நாடு – முத்தமிழ்