Book Back Questions For All Exams – 10th Tamil SET 2 – Thirukkural – திருக்குறள்

Samacheer Book Back Tamil Questions

10th Tamil SET 2 –  Thirukkural – திருக்குறள்

இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers)  அடங்கிய வினாக்களின்  தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Sub : Tamil Book Back Questions

Topic :  செய்யுள் திருக்குறள் (Thirukkural)

 10th Tamil SET 2 –  திருக்குறள்

பத்தாம் வகுப்பு 
செய்யுள் பகுதி 
 திருக்குறள்

கோடிட்ட இடங்களை நிரப்புக.

13. திருக்குறளில்……………அதிகாரங்களும்………..குறட்பாக்களும் உள்ளன.

விடை : 133 அதிகாரங்கள், 1330 குறட்பாக்கள்

14. திருக்குறள்……………………..முதலான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

விடை : ஆங்கிலம், கிரேக்கம், லத்தின்

15. ஒழுக்கத்தின் எய்துவர்……………இழுக்கத்தின்
எய்துவர் ………………பழி.

விடை : ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

 

உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

16. திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல்

1. நால்வர் நான்மணிமாலை 2. திருவள்ளுவமாலை 3. இரட்டைமணிமாலை

விடை : திருவள்ளுவமாலை

17. திருக்குறள் ……………..வெண்பாக்களால் ஆன நூலாகும்.

1. சிந்தியல் 2. குறள் 3. நேரிசை

விடை : குறள்

18. இணையில்லை முப்பாக்கு இந்நிலத்தே – எனப் பாடியவர்

1. பாரதியார் 2. சுரதா 3. பாரதிதாசன்

விடை : பாரதிதாசன்

உரிய சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

19. இறுவரை காணின் …………………………(கிழக்காம் / கிளக்காம்) தலை.

குறள் :
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை

விடை : இறுவரை காணின் கிழக்காம் தலை

20. மனவலிமையுடையோர் என்னும் பொருள் தரும் சொல்…………………..(உரவோர் / உறவோர்)

குறள் :
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து

விடை : உரவோர் – மனவலிமையுடையோர்

 


அடி எதுகையை தேர்ந்தெடுத்து எழுதுக.

21. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்

 

சீர் மோனையை அடிக்கோடிடுக.

22. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

 

விடுபட்ட சீர்களை எழுதுக.

23. பரிந்தோம்பிக் ………………………..ஒழுக்கம்……………………..
தேரினும்……………………..துணை

விடை :
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை

24. ஊக்கம் உடையான்……………………….பொருதகர்
தாக்கற்குப்…………………தகைத்து.

விடை :
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து

 

உவமையைப் பொருளொடு பொருத்தி எழுதுக.

25. அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று

விடை :
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

பொறாமை உடையவனிடம் வளர்ச்சி இருக்காது;
அதுபோல், ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இருக்காது

 

26. கொக்கொக்க கூம்பும் பருவத்து

விடை :
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

காலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.

சீர் பிரித்து எழுதுக.

27. ஒழுக்கமுடைமைகுடிமைஇழுக்கம்இழிந்தபிறப்பாய்விடும்.

28. காலங்கருதியிருப்பர்கலங்காதுஞாலங்கருதுபவர்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: