Daily Current Affairs – 2019 February 12 to 14 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (12 to 14 – Feb 2019 )

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  12 to 14 Feb 2019

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

சீனியர் தேசிய பேட்மிண்டன் தொடர்கள்

குவாஹாத்தி நகரில் சீனியர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடங்கியது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு குவாஹாத்தி நகரில் நடைபெற்று வரும் தொடரில் சாய்னா நேவால், பி.வி. சிந்து, சமீர் வர்மா மற்றும் பி காஷ்யப் போன்ற சில சிறந்த வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

கோல்டு கோப்பை

இந்திய மகளிர் அணி கால்பந்து போட்டியில், புவனேஸ்வரில் நடைபெறும் கோல்ட் கோப்பை சர்வதேச போட்டியின் இறுதி சுற்று ராபின் விளையாட்டில், மியான்மரை எதிர்கொள்கிறது.

கோல்டு கோப்பை 2019

புவனேஸ்வரில் நடைபெறும் 2019 ஆம் ஆண்டு பெண்கள் ஹீரோ கோல்டு கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் மியான்மர் நேபாளத்துடன் மோதுகிறது.

மியான்மர் கடைசி சுற்று ராபின் போட்டியில் 2-0 என்ற கணக்கில் இந்தியாவை தோற்கடித்ததுடன், நேபாளம் ஈரானை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டுக்குள் நுழைந்தது.

 

முக்கியமான நாட்கள்

 

பிப்ரவரி 13 – உலக வானொலி தினம்

உலக வானொலி தினம் ஒவ்வொரு ஆண்டும் வானொலியை ஒரு ஊடகமாக கொண்டாடும் விதமாக பிப்ரவரி 13 அன்று அனுசரிக்கப்படுகிறது. யுனெஸ்கோவின் 36 வது பொது மாநாட்டால் 2011 நவம்பர் 3ல் ஸ்பெயினின் இராச்சியம் முன்மொழியப்பட்ட பின்னர் இது அறிவிக்கப்பட்டது.

2019 தீம்:- உரையாடல், சகிப்புத்தன்மை மற்றும் அமைதி

 

திட்டங்கள்

 

பங்குதாரர்களுக்கான அவுட்ரீச் திட்டம்

2019ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி புது டெல்லியில் ஜவுளித்துறை பிரிவு எம்.எஸ்.எம்.இ.க்களுக்கான தொழில்நுட்ப திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. பிரதம மந்திரி அறிவித்துள்ள 100 நாட்கள் வேலைத்திட்டத்திற்கான ஆதரவு மற்றும் நலன்களைப் பெற பங்குதாரர்களுடன் தொடர்பு கொள்ள இந்த அவுட்ரீச் திட்டம் உதவும்.

KUSUM திட்டம்

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ‘கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மஹாபியான் (KUSUM)’ திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டம் இப்போது ஒப்புதல் கோரும் செயல்முறை கீழ் உள்ளது.

சோலார் மின் உற்பத்தியை (Solar Farming) மேற்கொள்வதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பது  கிசான் உர்ஜா சுரக்ஷா இவம் உத்தான் மஹாபியான் (Kisan Urja Suraksha evam Utthaan Mahaabhiyan-KUSUM) என்ற திட்டத்தின் நோக்கமாகும்.

முக்கிய மந்திரி வ்ரிதஜன் ஓய்வூதிய யோஜனா

முக்கிய மந்திரி வ்ரிதஜன் ஓய்வூதிய யோஜனா– MVPY முதியோர் ஓய்வூதிய திட்டத்தை 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பீகார் அரசு  அறிவித்துள்ளது .

இந்த திட்டத்தின்படி அரசாங்க சேவையில் இருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களைத் தவிர்த்து இதர சாதி, மதம், சமூக பாகுபாடின்றி அனைவருக்கும் 400 ரூபாய் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும்.

பீகார் பத்ரகார் சம்மன் யோஜனா (BPSY)

பீகார்  பத்ரகார் சம்மன் யோஜனா (BPSY) – 60 வயதிற்கு மேலான பத்திரிகையாளர்களுக்காக 6,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின்படி ஊடகங்கள் மற்றும் வேறு எந்த ஓய்வூதியத்தையும் பெறாதவர்கள் இதற்கு தகுதியுடையவர்கள்

பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் (PM-SYM)

குறைந்தபட்ச காப்பீட்டு ஓய்வூதியம் திட்டம்  PM-SYM கீழ் ஒவ்வொரு சந்தாதாரரும் 60 வயதை அடைந்த பின்னர் மாதத்திற்கு 3000 / – என்ற குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறுவார்கள்.

குடும்ப ஓய்வூதியம்: ஓய்வூதியம் பெறும் போது, சந்தாதாரர் இறந்துவிட்டால், ​​பயனாளியின் மனைவி குடும்ப ஓய்வூதியத்தில் பயனாளியின் 50% பெறுவார். இந்த குடும்ப ஓய்வூதியம் மனைவிக்கு மட்டுமே பொருந்தும்.

 

மாநில செய்திகள்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லியில் இருந்து வாரணாசி வரை இயக்கப்படுகிறது. 30 ஆண்டு காலமாக இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மாற்றாக அமைகிறது.

இந்திய இரயில்வேயின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம் தயாரித்த நாட்டின் முதல் என்ஜின் இல்லா ரெயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

 

சினிமாட்டோகிராஃப் (சட்டதிருத்த) மசோதா

சினிமாட்டோகிராஃப் (சட்டதிருத்த) மசோதா 2019 ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சட்டப்பூர்வமற்ற கேம்கார்டிங் மற்றும் படங்களின் நகல் ஆகியவற்றிற்கு தண்டனையை வழங்குவதன் மூலம் திருட்டுத்தனமாக சினிமா வெளியிடுவதை தவிர்க்க 1952 ஆம் ஆண்டின் சினிமாட்டோகிராஃப் சட்டதிருத்த மசோதா அமைந்தது.

தேசிய நினைவுச்சின்ன மசோதா

2018 லோக்சபாவில்,ஜாலியன்வாலாபாக் தேசிய நினைவுச்சின்ன (சட்ட திருத்த) மசோதா, நிறைவேற்றப்பட்டது.

சேமிப்பு திட்ட மசோதா 2018

லோக்சபாவில் கட்டுப்பாடற்ற சேமிப்பு திட்ட மசோதா 2018 பாராளுமன்ற எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்  நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றம் தனிநபர் சட்டங்கள் (சட்டதிருத்தம்) மசோதா 2019

லோக்சபாவின் கடைசி அவையில் பாராளுமன்றம் தனிநபர் சட்டங்கள் (சட்டதிருத்தம்) மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

இந்தியா–சவுதி அரேபியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுங்கத் துறை விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உதவிக்காக, முதலீட்டுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு செயல்முறையை நிறுவுவதற்கு வழிவகுக்க, சுற்றுலாத்துறையை வலுப்படுத்துவதற்காக இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய  அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

துப்புரவுப் பணியாளர்- தேசிய ஆணையத்தின் பதவிக்காலம்

துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக் காலத்தை, 31.03.2019 -லிருந்து மூன்றாண்டுகளுக்கு நீட்டிப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அயல்நாடு–வாழ் இந்தியர் திருமணப் பதிவு மசோதா 2019

இந்திய குடிமக்கள், குறிப்பாக பெண்கள், தமது அயல்நாடு வாழ் இந்திய கணவர்களால் சுரண்டப்படுவதிலிருந்து தடுத்து பாதுகாப்பு அளிப்பதற்கும், இந்த திருமணங்களில் அதிகப் பொறுப்புணர்வை உருவாக்குவதற்காகவும், அயல்நாடு வாழ் இந்தியர் திருமணப் பதிவு மசோதா 2019-ஐ அறிமுகம் செய்வதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதாவை நிறைவேற்றிய பின்பு, அயல்நாடு வாழ் இந்தியர்களின் திருமணங்கள் இந்தியாவிலோ அல்லது இந்திய தூதரகத்திலோ பதிவு செய்யப்படும். மேலும் பாஸ்போர்ட் சட்டம் 1967 மற்றும் குற்றவியல் நடைமுறை விதி 1973 ஆகியவற்றில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்.

 

மாநாடுகள்

 

மூன்றாவது இந்திய–ஜெர்மன் சுற்றுச்சூழல் கருத்துக்களம்

மூன்றாவது இந்திய-ஜெர்மன் சுற்றுச்சூழல் கருத்துக்களம் “தூய்மையான காற்று, பசுமை பொருளாதாரம்:” புது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இது குழு கலந்துரையாடல்கள் மற்றும் இணை அமர்வுகள் மூலம் ஒரு நாள் நிகழ்வானது, சவால்கள், தீர்வுகள் மற்றும் காற்று மாசு கட்டுப்பாடு, கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பொருளாதாரம் ஆகியவற்றின் தேவையான கட்டமைப்பு நிலைமைகள் மற்றும் பாரிஸ் உடன்படிக்கை மற்றும் செயற்பட்டியலில் ஐ.நா. 2030ன் அடிப்படையில் NDCகள் மற்றும் SDGகளை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது.

ஊடகப் பிரிவுகளுக்கான முதல் வருடாந்திர மாநாடு

புதுதில்லியில், விஞ்ஞான் பவனில்  மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (தனிப்பொறுப்பு) மற்றும் இளைஞர் விவகாரங்கள் விளையாட்டுத் துறை இணையமைச்சர் கர்னல் ராஜ்ய வர்தன் ரத்தோர் தலைமையில் ஊடகப் பிரிவுகளுக்கான முதல் வருடாந்திர மாநாடு நடைபெற்றது.

உலக அரசு உச்சி மாநாடு 2019 (WGS )

மதினத் ஜுமைராவில் உலக அரசு உச்சி மாநாடு WGS 2019 நடைபெற்றது. இந்த மாநாட்டில் 140 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான போட்டியால், 2022க்குள் 133 மில்லியன் புதிய வேலைகள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது என்று இந்த மாநாட்டில் கூறப்பட்டுள்ளது.

கிரேடாய் இளைஞர் மாநாடு 2019

புதுதில்லி தல்கடோரா அரங்கில் நடைபெற்ற 2019-கிரேடாய் இளைஞர் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

2022 – ஆம் ஆண்டிற்குள் வீடற்ற அனைவருக்கும் வீடு வழங்கும் பணி விரைவாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.  பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் சுமார் ஒன்றரை கோடி வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாகவும், இதில் 15 லட்சம் வீடுகள் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்காக கட்டப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.  சொந்த வீடு வேண்டும் என்ற எளிய குடிமக்களின் கனவுகளை நிறைவேற்றுவதில் கிரேடாய் ஆற்றிவரும் பங்கை பிரதமர் பாராட்டினார்.

 

இணைய போர்ட்டல்

 

இ–ஔஷாதி[AUSHADHI] போர்ட்டல்

புது டில்லியில் ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளை ஆன்லைனில் அங்கீகாரம் வழங்குவதற்கான இ-ஔஷாதி[AUSHADHI] போர்ட்டலை, ஆயுஷ் அமைச்சர், ஸ்ரீ ஷிரிபத் எஸ்ஸோ நாயக் துவக்கி வைத்தார்.


Download Daily Current Affairs [2019 – Feb – 12 to 14]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading