Daily Current Affairs (8 to 10- Nov 2018 )
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : 8 to 10 Nov 2018
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
ஆசிய ஏர்கண் சாம்பியன்ஷிப்
குவைத்தில் நடைபெற்ற 11வது ஆசிய ஏர்கண் சாம்பியன்ஷிப் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி ஜூனியர் பிரிவில் இந்திய ஜோடி மனு பேகர் மற்றும் சௌரப் சவுதரி ஆகியோர் உலக சாதனை படைத்து தங்கம் வென்றனர்.
உலக மல்யுத்தம் தரவரிசை- இந்திய வீரர் பஜ்ரங் புனியா
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றார். உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் ஒருங்கிணைந்த உலக மல்யுத்தம் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் தொடங்கியது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசி சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
அத்துடன் 20 ஓவர் உலக கோப்பையில் சதம் கண்ட 3-வது வீராங்கனை என்ற சிறப்பையும் ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார்.
ஐசிசி மகளிர் உலக டி20 போட்டி
கயானாவில் நடைபெறும் ICC மகளிர் உலக டி20 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா துவக்க ஆட்டத்தில் விளையாடுகிறது.
முக்கியமான நாட்கள்
நவம்பர் 10 – சர்வதேச கணக்கியல் தினம்
நவம்பர் 10 அன்று சர்வதேச கணக்கியல் தினம் கொண்டாடப்படுகிறது. 1494 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி இரட்டை நுழைவு புத்தகத்தைப் பற்றி முதல் புத்தகத்தை வெளியிட்ட, இத்தாலிய கணிதவியலாளர் லூகா பாசியோலிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சர்வதேச கணக்கியல் தினம் நவம்பர் 10 அன்று கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 10 – அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக அறிவியல் தினம்
அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக அறிவியல் தினம் 10 நவம்பர் அன்று கொண்டாடப்படுகிறது. இது சமுதாயத்தில் விஞ்ஞானத்தின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது மற்றும் வளர்ந்துவரும் விஞ்ஞான விவாதங்களில் பொதுமக்கள் ஈடுபட வேண்டும் என்பதையும் காட்டுகிறது. இது நம் அன்றாட வாழ்வில் விஞ்ஞானத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
2018 தீம்:- “Science, a Human Right”
மாநில செய்திகள்
சங்வாரி‘ வாக்குச்சாவடிகள்
சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்கள் வாக்காளர்கள் தங்கள் உரிமையைக் கடைப்பிடிக்க ஊக்குவிக்க சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளில் ‘சங்வாரி’ வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சத்தீஸ்கர் மொழியில் சங்வாரி என்றால் நண்பன் என்று பொருள் ஆகும்.
பெண்களுக்குச் சாதகமான வாக்குச் சாவடிகள் அனைத்தும் பெண் அதிகாரிகளால் அதாவது தேர்தல் அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட அனைவரையும் பெண்களால் ஆன அதிகாரிகளால் பணியமர்த்தப்படும்.
உத்தராகண்ட் 18 வது துவக்க தினம்
உத்தரபிரதேசத்திலிருந்து பிரிந்து தனி மாநிலமாக உத்தராகண்ட் உருவானது.உத்தராகண்ட் தனது 18 வது துவக்க தினத்தை கொண்டாடுகிறது.
24 வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா
24 வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா (KIFF) நேதாஜி உள்ளரங்க ஸ்டேடியத்தில் தொடங்கியது. இது நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய திரைப்பட விழாவாக கருதப்படுகிறது, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து சர்வதேச விருதினை வென்ற திரைப்படங்களை திரையிடுகின்றனர்.
சர்வதேச செய்திகள்
ஈராக்கிற்கு பொருளாதாரத் தடை
தெஹ்ரானின் மீது அமெரிக்க பொருளாதாரத் தடை இருந்தபோதிலும் அண்டை நாடான ஈரான் நாட்டிலிருந்து மின்சாரம் இறக்குமதி செய்ய ஈராக்கிற்கு பொருளாதாரத் தடை விலக்கை அமெரிக்கா வழங்கியது.
தைவான் போர்க்கப்பல்
பெய்ஜிங்கிலிருந்து வரும் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சீன நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்த்து தீவின் திறனை அதிகரிக்க ஒரு வழிகாட்டி ஏவுகணை போர்க்கப்பலை தைவான் அறிமுகப்படுத்தியது.
‘தியா‘ தபால் தலை
இந்தியாவில் கொண்டாடப் படும் தீபாவளி பண்டிகைக்கு பெருமை சேர்க்கும் விதமாக ‘தியா’ தபால் தலையை ஐ நா வெளியிட்டது.
இலங்கை பாராளுமன்றம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை ஒரு அரசிதழ் அறிவிப்பு மூலம் கலைத்துவிட்டு ஜனவரி 5 ஆம் தேதி தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதியினால் ஒப்பமிடப்பட்ட இதற்கான விசேட வர்த்தமானி அரசாங்க அச்சக கூட்டுத்தாபன அச்சகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் (2) (c), 33 வது சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த பாராளுமன்றத்திற்கு 225 உறுப்���ினர்களை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் 2019 ஜனவரி 05 ஆம் திகதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் புதிய பாராளுமன்றம் கூடவேண்டும் என்பது அரசியலமைப்பு விதிமுறையாகும்.
கூட்டணி விமானத்திற்கு எரிபொருள் நிரப்ப தடை
ஏமனில் நடக்கும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்கு அமெரிக்கா தடைவிதித்தது, இது சவுதி அரேபியா படைக்கு ஏற்பட்ட பின்னடைவாகும்.
பாதுகாப்பு செய்திகள்
முப்படை துணைத் தளபதிகளின் நிதி அதிகாரம்
ராணுவப் படைகளின் வருவாய் தொடர்பான கொள்முதல் சார்ந்த முடிவுகளை விரைவாக மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில் முப்படை துணைத் தளபதிகளின் நிதி அதிகாரத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஐந்து மடங்காக உயர்த்தியது.
இந்த புதிய அதிகாரம் வழங்கப்பட்டதின் மூலம், ரூ.500 கோடி வரை செலவு செய்வதற்கான அதிகாரம் துணைத் தளபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அறிவியல் செய்திகள்
‘பயோனிக் காளான் மின்சாரம் உற்பத்தி
இந்திய வம்சாவழியினர் உட்பட விஞ்ஞானிகள், ஒரு சாதாரண வெள்ளை பட்டன் காளானில் சயனோபாக்டீரியாவின் 3D-அச்சிடும் கொத்தால் பச்சை சக்தியை பயோனிக் கருவி மூலம் உருவாக்கினர்.
சீனா செயற்கை நுண்ணறிவு செய்தி அறிவிப்பாளர்
க்சின்ஹுவா [Xinhua] செய்தி நிறுவனம் “உலகின் முதல்”, செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரு ஜோடி செய்தி அறிவிப்பாளர்களை அறிமுகப்படுத்தியது.
வியாழனின் ட்ரோஜன் விண்கற்கள் ஆய்வு செய்யத்திட்டம்
நாசாவின் ரால்ப் – ப்ளூட்டோ வரை பயணம் மேற்கொண்ட ஒரு விண்வெளிக் கருவி – சூரிய மண்டலத்தின் ஆரம்ப நாட்களில் இருந்து எஞ்சியிருக்கும் வியாழனின் ட்ரோஜன் விண்கற்களை ஆராய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில், ரால்ப், லூசி மிஷனுடன் இணைந்து வியாழனின் ட்ரோஜன் விண்கற்களுக்கு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாநாடுகள்
இந்திய விற்பனையாளர் சந்திப்பு
அரிசி, தேநீர், மசாலா பொருட்கள் மற்றும் உலர் பழங்கள் ஆகிய நான்கு முக்கிய பொருட்களின் இந்திய ஏற்றுமதியாளர்கள் உணவு மற்றும் வேளாண் வாங்குபவர் விற்பனையாளர் சந்திப்பு (பிஎஸ்எம்) சவுதி அரேபியாவில்நடைபெற்றது.
மாற்றுத் திறனாளி இளையோருக்கான சர்வதேச தகவல் தொழில்நுட்ப சவால் – 2018
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்று திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரை 2018-ஆம் ஆண்டிற்கான, மாற்றுத் திறனாளி இளையோருக்கு சர்வதேச தகவல் தொழில்நுட்ப சவால் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஆண்டு, இந்தப் போட்டியை, இந்தியா, கொரிய அரசு மற்றும் சர்வதேச மறுவாழ்வு அமைப்புடன் இணைந்து நடத்துகிறது.
உலகளாவிய கூலிங் இன்னோவேஷன் உச்சி மாநாடு
உலகளாவிய கூலிங் இன்னோவேஷன் உச்சி மாநாட்டை 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி புது தில்லியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைக்கிறார்.
இந்த உச்சிமாநாடு முதன்முறையாக தீர்வுகளை மையமாகக் கொண்ட நிகழ்வு ஆகும், இது அதிகரித்துவரும் அறை குளிரூட்டிகளால் ஏற்படும் பிரச்னையை சமாளிக்க உலகெங்கிலும் உள்ள தலைவர்களுடன் சேர்ந்து கூட்டிணைந்த வழிமுறைகளையும் பாதையையும் கண்டறிய உதவும்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)
இந்தியா– மொரோக்கோ இடையே ஒப்பந்தம்
பொது மற்றும் வணிக விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவி, குற்றவாளிகளை நாடுகடத்த இந்தியா- மொரோக்கோ நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது .
இந்தியா– இத்தாலி இடையே ஒப்பந்தம்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில் பயிற்சி மற்றும் கல்வியைத் தொடர்வதற்காக இந்தியா-இத்தாலி இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது .
ஆந்திரப் பிரதேசத்தில் பழங்குடி மத்திய பல்கலைக்கழகம்
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பழங்குடிகளுக்கான மத்திய பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக 2009-ம் ஆண்டின் மத்திய பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது .
பாதுகாப்பு செய்திகள்
SIMBEX 18
“சிங்கப்பூர்-இந்தியா இருதரப்பு கடற்படை பயிற்சி” சிம்ப்எக்ஸ் [SIMBEX]ன் 25-வது பதிப்பு, 2018 நவம்பர் 10 முதல் 21 வரை, அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் திட்டமிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மற்றும் இந்தியா இருதரப்பு கடற்படை பயிற்சியின் வெள்ளி விழா இந்தாண்டு கொண்டாடப்படுகிறது.
கே9 வஜ்ரா, எம்777 ஹோவிட்ஸர் துப்பாக்கி
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள தியோலாலி பீரங்கி நிலையத்தில், கே9 வஜ்ரா மற்றும் எம்777 ஹோவிட்ஸர் உட்பட புதிய பீரங்கித் துப்பாக்கிகள் மற்றும் உபகரணங்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டன.
வணிகம்
டிஜிட்டல் முறை பணப்பரிவர்த்தனை
கடந்த இரண்டு ஆண்டுகளில், டிஜிட்டல் முறையில் செலுத்தும் பணப்பரிவர்த்தனைகள் 2018 ஆகஸ்டில் 244 கோடியாக உயந்தது.
புதிய கட்டணம் முறைகளான, BHIM-UPI, AePS மற்றும் NETC ஆகியவை டிஜிட்டல் கட்டண முறையை ஊக்குவிப்பதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்தது.\
நியமனங்கள்
பித்யுத் சக்ரவர்த்தி என்பவர் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார்.
Download Daily Current Affairs [2018- Nov – 8 to 10]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

