Daily Current Affairs – 2019 April 2 to 4 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs 

(April 2019 – 2 to 4)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  2 to 4 April 2019

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

பஹ்ரைன் கிராண்ட் பிக்ஸ்

பஹ்ரைன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், மெர்சிடிஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.

மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டி

கோலாப்பூர் , ஏப்ரல் 3  அன்று நடைபெற்ற போட்டியில் மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

மகளிர் பிரிவு முதல் சுற்றில், உலகின் 6-ஆம் நிலையில் இருக்கும் சிந்து, உலகின் 20-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அயா ஒஹோரியை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையே 38 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 22-20, 21-12 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் கைப்பற்றியுள்ளார். அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னரை , ஃபெடரர் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், 6க்கு1, 6க்கு4 என்ற நேர் செட் கணக்கில் ரோஜர் ஃபெடரர் வெற்றி பெற்றார். 4ஆவது முறையாக மியாமி ஓபன் பட்டத்தை வெல்லும் ரோஜர் ஃபெடரருக்கு இது ஒட்டுமொத்தமாக அவர் கைப்பற்றும் 101  வது கோப்பை.

 

முக்கியமான நாட்கள்

 

ஏப்ரல் 2.- இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள்.

ஆட்டிஸம் குழந்தைகளை தாக்கும் முளை வளர்ச்சிக் குறைபாடு கொண்ட நோய்.

Theme for the day is “Assistive Technologies, Active Participation”.

In 2008, The United Nations General Assembly unanimously declared

 

மாநில செய்திகள்

 

முதலாவது கப்பல் கட்டும் தளம்

100 போர்க் கப்பல்களைக் கட்டமைத்து வழங்கிய இந்தியாவின் முதலாவது கப்பல் கட்டும் தளமாக கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியாளர்கள் என்ற நிறுவனம் உருவெடுத்துள்ளது.

தமிழக லோக் ஆயுக்தா தலைவர்

தமிழக லோக் ஆயுக்தா தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊழல் தடுப்பு அமைப்பான லோக் ஆயுக்தாவுக்கு 4 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் நீதித்துறை உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊழல் எதிர்ப்புக் குழுவின் நீதித்துறை அல்லாத உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ராஜாராம், மூத்தவழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

 

அறிவியல் செய்திகள்

 

உலகளாவிய காற்று ஆய்வு 2019 (SOGA2019)

2017 ம் ஆண்டில் காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் 1.2 மில்லியனுக்கும் மேலான இறப்புக்கள் நிகழ்ந்திருப்பதாக சுகாதார வெளியீடு நிறுவனம் (ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டியூட் அமைப்பு-HEI) வெளியிட்ட உலகளாவிய காற்று ஆய்வு 2019 (SOGA2019)  குறிப்பிட்டுள்ளது.

காற்று மாசுபாடு பாதிப்பால்  இந்தியா மற்றும் சீனாவில் இருந்து மட்டும் பாதிக்கு மேல் இறந்துள்ளனர். உலக அளவில் ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கான மரணங்களுக்கு இந்தியாவும் சீனாவும் சரி பங்கு சம அளவில் பொறுப்பு வகிக்கின்றன.இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு மூன்றாவது முக்கிய காரணமாக காற்று மாசுபாடு உள்ளது.

இந்தியாவில் அனைத்து சுகாதார அபாயங்களிலும் நிகழும் மரணங்களில் மூன்றாவது மிகப்பெரிய காரணி காற்று மாசுபாடு ஆகும்.

கேரளாவில் இரண்டு புதிய தாவர இனங்கள்

கோழிக்கோட்டு புவியியல் துறை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இடுக்கியின் மதிக்கேட்டான் ஷோலா காடுகளின் (உயரமான பசுமையான காடு) எல்லையில் இருக்கும் ஷோலா தேசியப் பூங்காவில் மெமிசிலோன் இடுக்கியனம் (Memecylon idukkianum) எனப்படும் இரண்டு புதிய அயன்வுட் தாவர இனங்களை கண்டுபிடித்துள்ளனர்.

ISRO வரும்காலங்களில் அனுப்பும் செயற்கைகோள்களின்  பட்டியல்

  • 2019 மே மாதம் முதல் 2020 ஆம் ஆண்டின் தொடக்க மாத வரையிலான காலகட்டத்தில் ‘பாதுகாப்பு’ செயற்கைக்கோள்களை அனுப்ப ISRO திட்டமிட்டுள்ளது.பாதுகாப்பு படையினருக்கு உதவும் வகையில் ஜிசாட் தொகுப்பு செயற்கைக் கோள்கள் உட்பட 33 புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
  • ராணுவ பயன்பாட்டிற்கான 5 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
  • எதிரிகளின் ஆயுதங்கள், பதுங்கு குழிகள் போன்றவற்றை துல்லியமாக அறியமே மத்தியில் பி.எஸ்.எல்.வி சி46 ராக்கெட் ரிசாட் 2 பி என்ற செயற்கைக்கோளையும், ஜூன் மாதத்தில் பி.எஸ்.எல்.வி சி 47 ராக்கெட் மூலம் கார்ட்டோசாட் 3 செயற்கைக் கோளையும் அனுப்ப திட்டமிட்டுள்ளது.
  • செப்டம்பர் மாதம் புதிய ஜிசாட் தொகுப்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
  • ராணுவ செயற்கைக் கோள்கள் தவிர இந்த ஆண்டில் சந்திராயன் 2 செயற்கைக்கோளையும் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இஸ்ரோ தலைவர் : Dr.K.சிவன்

 

உலக செய்திகள்

 

சிக்காகோவின் முதல் கருப்பின பெண் மேயர் – லோரி லைட்ஃபுட் (Lori Lightfoot)

முன்னாள் மத்திய வழக்கறிஞரான லோரி லைட்ஃபுட் (Lori Lightfoot) அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமான சிகாகோவுக்கு மேயரானார்.வரலாற்றில் முதல்முறையாக கறுப்பினத்தை சேர்ந்த  முபெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மத்திய வழக்கறிஞரான லோரி லைட்ஃபுட் ஒரு ஆப்பிரிக்காவை சேர்ந்தவராவார்.  ஒர�� ஆப்பிரிக்க அமெரிக்க பெண், சிகாகோ மேயராக தேர்ந்தெடுக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

 

ஒப்பந்தங்கள்

 

இந்தியா NABCONS உடன் ஒப்பந்தம்

மலாவிவில் இந்தியா-ஆபிரிக்க வேளாண் மற்றும் கிராம மேம்பாட்டு நிறுவனம் (IAIARD) அமைப்பதற்கு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி கழக (NABCONS) தேசிய வங்கியுடன் இந்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.

 

பாதுகாப்பு நிகழ்வுகள்

 

24 MH-60R ஹெலிகாப்டர்கள் வழங்க அமெரிக்கா முடிவு

கடலுக்கு அடியில் செல்லும் நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடித்து தாக்கி அழிக்கும் எம்.ஹெச்.60ஆர் ஷீ ஹாக் ரக அதிநவீன ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் வெளிநாட்டு இராணுவ விற்பனை (FMS) திட்டத்தின் கீழ் அமெரிக்கா 2.4 பில்லியன் டாலருக்கு இந்தியாவிற்கு 24 MH 60 ரோமியோ ஸாஹோக் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்தது.

 

செயலி

 

வாட்ஸாப் (Whatsapp) ‘tipline’ சேவை

2019 ல் நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தல்களுக்காக, இந்தியாவில் சாத்தியமான வதந்திகள் மற்றும் தவறான தகவலை சரிபார்க்கும் “tipline” சேவையை Whatsapp  அறிமுகப்படுத்தியுள்ளது.

AUSINDEX-19-கூட்டு கடற்பயிற்சி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கடற்படைகள் பங்கேற்கும் ஆசி இன்டெக்ஸ்-19 (AUSINDEX-19) கூட்டு கடற்படை பயிற்சியானது ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஏப்ரல் 2 முதல் 16 வரை வங்கக்கடலில் நடைபெறுகிறது.

இப்பயிற்சியானது இந்தியப் பெருங்கடலில் கடல் வழி போக்குவரத்து நலன்களை அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும்.

 

விருதுகள்

 

சயீத் பதக்கம்

இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு மூலோபாய உறவுகளுக்கு “பெரிய ஊக்கத்தை அளிப்பதற்காக” பிரதம மந்திரி நரேந்திர மோடிக்கு சயீத் பதக்கம் வழங்கி ஐக்கிய அரபு எமிரேட்டு(UAE) ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹியான் கௌரவித்தார்.

 

 


Download Daily Current Affairs [2019- April – 2 to 4]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading