Athiyaman Team Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(January 26-31st Current Affairs 2020 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : Jan 26 – 31st Current Affairs.
முக்கியமான நாட்கள்
மின்விளக்குக்கு எடிசன் காப்புரிமை பெற்ற தினம் – Jan 27
- தாமஸ் ஆல்வா எடிசன் அனைவருக்கும் பயன்படும் வகையில் நீண்ட நேரம் எரியக் கூடிய மின்விளக்கை 1878-ல்கண்டுபிடித்தார்.
- பின்னர் 1879-ல் காப்புரிமைக்காக பதிவு செய்தார் எடிசன். சிறிது காலம் கழித்து 1880 ஜனவரி 27-ம் தேதி அவருக்கு காப்புரிமை கிடைத்தது.
‘பஞ்சாப் சிங்கம்’ லாலா லஜபதி ராய் பிறந்த தினம்- ஜனவரி 28
இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னோடியும் பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படுவருமான லஜபதி ராய் பிறந்த தினம் ஜனவரி 28.
லாலா லஜபதி ராய் 1865 ஜனவரி 28 அன்று இன்றைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தார்.. 1920-ல் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். 1928 அக்டோபர் 30 அன்று சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வருகை தந்தபோது எதிர்த்து அமைதி வழியில் போராட்டங்களை முன்னெடுத்தார்.
மெட்ராஸுக்கு தொலைபேசி அறிமுகமான தினம் – ஜனவரி 28
- 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி மெட்ராஸுக்கு தொலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டன.அறிவியலாளர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் கண்டுபிடித்த தொலைபேசிக்கு, 1876-ல் காப்புரிமை கிடைத்தது.
- தொலைபேசித் தொடர்பை அமைப்பதற்கு 1881-ல் ஓரியன்டல் தொலைபேசி நிறுவனத்துக்கு இந்திய அரசு அனுமதி வழங்கியது. 19-11-1881 அன்று பாரிமுனையில் உள்ள எர்ரபாலு செட்டித் தெருவில் இந்தியாவின் முதல் தொலைபேசி இணைப்பகம் தொடங்கப்பட்டது. பின்னர் 1882 ஜனவரி 28-ம் தேதி மேஜர் ஈ.பேரிங் மூலம் மெட்ராஸில் தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்திய செய்தித்தாள் தினம்
- நம் நாட்டில் முதன்முதலாக ஹிக்கீஸ் பெங்கால் கெஜெட் (Hicky Bengal Gazette) என்கிற வார இதழ் வெளிவந்தது. இதனை ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கீ என்பவர் 1780 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி வெளியிட்டார். இ இந்தியாவில் வெளிவந்த முதல் வார இதழ் என்பதால் அத்தினத்தை இந்திய செய்தித்தாள் தினமாக கொண்டாடுகிறோம்.
சி.சுப்பிரமணியம் பிறந்த நாள் ஜன.30
- இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவரான சி.சுப்பிரமணியம் 1910-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி அன்று பொள்ளாச்சியில் பிறந்தார்.
- சுதந்திர இந்தியாவில் மெட்ராஸ் மாநிலத்தில் ராஜாஜி, காமராசர் தலைமையிலான அமைச்சரவைகளில் கல்வி, சட்டம், நிதி அமைச்சராகப் பணியாற்றினார்.
- 1962-ல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1979-ல் சரண் சிங் தலைமையிலான ஜனதா அரசில் பாதுகாப்பு அமைச்சராகச் செயல்பட்ட சுப்பிரமணியம், மகாராஷ்டிர ஆளுநராகவும் இருந்துள்ளார். 1998-ல் பாரத ரத்னா விருதைப் பெற்றார் சுப்பிரமணியம் சிதம்பரம்.
- 1960-களில் இந்தியாவில் நிகழ்ந்த பசுமைப் புரட்சிக்குக் காரணகர்த்தாவாக இருந்தவர் என்பதைப் பாராட்டி இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மகாத்மா காந்தி நினைவு தினம்
- மகாத்மா காந்தி 1948 இல் ஜனவரி 30 அன்று படுகொலை செய்யப்பட்ட நினைவுதினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
- காந்தியின் தியாகத்தையும் சுதந்திரத்திற்காக உயிர்நீத்தவர்களையும் நினைவுகூரும் விதமாக இன்றைய தினம் தியாகிகள் தினமாகவும் போற்றப்படுகிறது.
தியாகிகள் தினம்
- இந்திய விடுதலைக்காக அயராது பாடுபட்டு இன்னுயிரை தந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாகவும் தேசத்தந்தை மகாத்மா காந்தி மறைந்த நாள் (ஜன.30) தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
- சுதந்திர போராட்ட வீரர்களின், வீரச் செயல்களை இன்றைய தலைமுறையினருக்கு தெரிவிப்பதே இந்த நாளின் நோக்கம்.
- இந்நாளை ஷாஹீத் திவாஸ் என்றும் அழைக்கின்றனர்.
விளையாட்டு செய்திகள்
தேசிய ரோலர் ஸ்கேட்டிங்
- ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 57-வது தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடந்தன. இதில் தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் புதுச்சேரி மாணவர்களுக்கு 16 பதக்கங்கள் கிடைத்துள்ளன.இதில் 4 தங்கம், 9 வெள்ளி, 3 வெண்கலம் அடங்கும்.
- பேட்ரிக் பள்ளியில் படிக்கும் சாய் பிரணீதா 3 தங்கப் பதக்கங்களை (ரிங், ரோடு போட்டிகள்) வென்றார். அதேபோல் அமலோற்பவம் பள்ளியில் படிக்கும் சாரதி என்னும் மாணவர், கிளாசிக் பிரிவில் தங்கத்தையும், ஸ்பீடு போட்டியில் வெள்ளியும் வென்றார்.
Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course SI Test Batch
NTPC Video Course RRR Test Batch RRB Video Course Other Video Course
கிராமி விருதுகள்
- சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் 62-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றது.
- 15 முறை கிராமி விருதினை வென்றவரும், அமெரிக்காவை சேர்ந்த பிரபல பெண் இசைக்கலைஞருமான அலிசியா கீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
- பிகமிங் என்ற பெயரில் தனது சுயசரிதையை ஒலிப்புத்தகமாக வெளியிட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல்லே ஒபாமாவுக்கு, ‘சிறந்த பேசும் சொல்’ என்ற பிரிவில் கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.
- மெரிக்காவை சேர்ந்த 18 வயதான இளம் பாப் பாடகி பில்லி எல்லிஷ், சிறந்த புதிய இசைக்கலைஞர், இந்த ஆண்டின் சிறந்த பாடல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகளை பெற்றார். அவரது மூத்த சகோதரரான பின்னியாஸ் ஓகோனெல் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை பெற்றார்.
- பில்லி எல்லிசுக்கு அடுத்தபடியாக அமெரிக்க பாடகி லிசோ 3 பிரிவுகளில் கிராமி விருதுகளை வென்றுள்ளார். புகழ்பெற்ற பாடகியான லேடி காகா, காட்சி ஊடகத்தில் (விசுவல் மீடியா) சிறந்த பாடலை எழுதியதற்காக கிராமி விருதை வென்றார்.
- இந்திய விடுதலைப் போரில் மிக முக்கியமான தலைவரான சுபாஷ் சந்திர போஸின் 123-வது பிறந்ததின நாள் இன்று.
- ஜானகிநாத் – பிரபாவதிக்கு ஒன்பதாவது மகனாக 1887ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் நாள் ஒரிஸாவில் கட்டாக் நகரில் கோதனியா என்னும் ஊரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார்.1943ல் சிங்கப்பூரில் சுதந்திர அரசுக்கான பிரகடனத்தை நேதாஜி வெளியிட்டார்.
கரோனா வைரஸ்
- சீனாவில் பெய்ஜிங் (வுஹான் நகரில்) என்ற இடத்தில கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அங்கு நடக்கவிருந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட சார்ஸ் வைரஸ்சின் வகையான கரோனா வைரஸ் சீனாவில் தற்போது பரவி வருகிறது.
- ஜப்பானில் நடப்பாண்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன.
ககன்யான் திட்டம்
- இஸ்ரோ முதன்முதலாக ‘வியோம் மித்ரா’ என்ற பெண் ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்த ரோபோ 2021ஆம் ஆண்டில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில், விண்வெளி வீரர்களுக்கு உதவி செய்யும்.
- ககன்யான் திட்டத்தில் வீரர்களை அனுப்புவதற்கு முன்னதாக வியோம் மித்ரா விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது.
கிரீஸின் அதிபர்
- கிரீஸின் அதிபராக முதல் முறையாக பெண் ஒருவர் 63 வயதான கேத்ரினி தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- கிரீஸின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேத்ரினி அந்நாட்டின் மூத்த நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர்.
தேசிய ஊடக விருது
- மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராமுக்கு அவரது 40 ஆண்டுகால பத்திரிகைத்துறை சேவையை பாராட்டி கேரள ஊடக அகாடமியின் சார்பில் தேசிய ஊடக விருது வழங்கப்படுகிறது.
- இந்த விருதை மார்ச் மாதம் கொச்சியில் நடக்கும் ஊடக மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்க உள்ளார்.

குடியரசுத் தலைவர் விருது
- காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு ஒவ்வொருஆண்டும் குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
- குடியரசுத் தலைவர் விருதுக்கு தமிழக காவல் துறை அதிகாரிகள் 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தகைசால் பணி
- இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகள் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு கூடுதல் டிஜிபி சைலேஷ்குமார் யாதவ், திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப் பிரிவு எஸ்.பி பெத்துவிஜயன் ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன.
பாராட்டத்தக்க பணி
இதுதவிர குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான விருதுகளுக்கு தேர்வான 21 பேரின் விவரம் வருமாறு:
- சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்பி சி.ராஜேஸ்வரி, சென்னை போக்குவரத்து காவல் துணை ஆணையர் மயில் வாகனன், புனித தோமையார் மலை ஆயுதப்படை துணை ஆணையர் ர.ரவிச்சந்திரன், சென்னை ஆயுதப்படை துணை ஆணையர் கி.சவுந்திரராஜன், சென்னை குற்றப்புலனாய்வுத் துறை டிஎஸ்பி ச.வசந்தன், நாகர்கோவில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஎஸ்பி கோ.மதியழகன், திருநெல்வேலி குற்றப்புலனாய் வுத்துறை டிஎஸ்பி வே.அனில் குமார், திருப்பூர் மாநகர காவல் உதவி ஆணையர் கா.சுந்தரராஜ், சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஎஸ்பி சே.ராமதாஸ் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
- மேலும், கோவை குடிமைப் பொருள் டிஎஸ்பி ந.ரவிக்குமார், சென்னை போக்குவரத்து காவல் உதவி ஆணையர் ஷே.அன்வர் பாட்சா, நாகப்பட்டினம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சென்னை பாதுகாப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ம.நந்தகுமார், ஈரோடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை காவல் ஆய்வாளர் மு.நடராஜன், தூத்துக்குடி குடிமைப்பொருள் காவல் ஆய்வாளர் ந.திருப்பதி, சென்னை தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அ.மணிவேலு ஆகியோரும் குடியரசு தலைவர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- இதுதவிர, சென்னை சிறப்பு புலனாய்வு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ந.ஜெயசந்திரன், த.டேவிட், ஜே.பி.சிவக்குமார், ஒய்.சந்திரசேகரன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்திய குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகள் 3 பேருக்கும், பாராட்டத்தக்கப் பணிக்காக 21 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
சர்வதேச வானவியல் ஒன்றியத்தின் பரிசு
- ‘ஒரே வானத்தின் கீழ்’ என்ற மையக் கருத்தைத் தலைப்பாகக் கொண்டு சா்வதேச வானவியல் ஒன்றியம், நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை அண்மையில் நடத்தியது. வானவியல் ஒன்றியம் நடத்திய இந்தப் போட்டியில் 128 நாடுகளைச் சோ்ந்த சுமாா் 10 லட்சம் போ் கலந்து கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
- இதில், புதுச்சேரி முதலியாா்பேட்டை அா்ச்சுன சுப்புராய நாயக்கா் அரசு நடுநிலைப் பள்ளி கலந்து கொண்டது. சர்வதேச வானவியல் ஒன்றியத்தின் பரிசை இந்தியாவிலிருந்து வென்ற ஒரே ஆசிரியர் என்ற பெருமையை புதுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியர் அரவிந்தராஜா பெற்றுள்ளார்.
சிஐடியு அகில இந்திய மாநாடு
- சிஐடியு தொழிற்சங்க அமைப்பின் 16வது அகில இந்திய மாநாடு 2020 ஜனவரி 23ந் தேதி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ வளாகத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேமலதா கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
- குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ரத்து செய்ய வேண்டும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் ஜனநாயக உரிமைகள்நிலைநாட்டப்பட வேண்டும், பொதுத்துறை வங்கிகளை இணைப்பதை நிறுத்தக்கோரி நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் நடத்த உள்ள வேலை நிறுத்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும், கேரள ஆளுநரின் மாநில அரசுக்கு எதிரான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
24 வார கருவைக் கலைப்பதற்கு அனுமதி
- 24 வார கருவைக் கலைப்பதற்கு அனுமதி தரும் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
- 1971-ம் ஆண்டு கருக்கலைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதுள்ள கருக்கலைப்புச் சட்டப்படி, 20 வாரங்கள் வரையிலான கருவை மட்டுமே கலைக்க முடியும்.
- ஆனால், புதிய திருத்தத்தின்படி, தாய்க்கோ அல்லது கருவில் உள்ள சிசுவுக்கோ உயிருக்கு ஆபத்து நேரிடும் பட்சத்தில் 24 வாரங்கள் வரையிலான கருவைக் கலைக்கலாம்.
போக்குவரத்து நெரிசல் நகரம்
- போக்குவரத்து நெரிசல் மிக்க உலகின் 57 நாடுகளில் 416 நகரங்களில் முதல் 5 இடங்களில் இந்தியாவின் பெங்களூரு, மும்பை, புனே ஆகிய 3 நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு செய்யும் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள டாம்டாம் டிராஃபிக் இன்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் உலகிலேயே அதிகமான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில்
1.பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
2 . பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நகரம் உள்ளது.
3 . கொலம்பியாவின் போகோடா நகர மக்கள்
4 . புனே நகர மக்கள்
8-வது இடத்தில் டெல்லி நகரம் இடம் பெற்றுள்ளது.
- ஐரோப்பிய நகரங்களில் அதிகமான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் இஸ்தான்புல் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து கிவ், புசாரெஸ்ட், பீட்டர்ஸ் பர்க் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
- அமெரிக்காவில் அதிகமான போக்குவரத்து நெரிசல் மிக்க நகரங்களில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து நியூயார்க் நகரமும், சான் பிரான்சிஸ்கோ, சான் ஜோஸ் மற்றும் சீட்டல் நகரங்களும் இடம் பெற்றுள்ளன.
பத்ம விருதுகள்
- மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றிய 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 9 பேருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
- பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- மொத்தமாக 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 16 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது.
- இந்தியா முழுவதற்கும் மொத்தம் மூன்று பத்மவிபூஷண் விருதுகளையும், ஒன்பது பத்மபூஷண் விருதுகளையும், 73 பத்மஸ்ரீ விருதுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
- தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷண் விருதும், அமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த வேணு ஸ்ரீநிவாசன், மனோகர் தேவதாஸ், பிரதீப் மற்றும் ஷாபி மஹபூப், ஷேக் மஹபூப் உள்ளிட்டோரும் பத்ம ஸ்ரீ விருதுகள் பெறுகின்றனர்.
- கோவையைச் சேர்ந்த 98 வயது யோகா ஆசிரியர் வி. நாகம்மாள், நாட்டுப்புறப் பாடகர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், சென்னை கிண்டி பாம்பு பண்ணையை நிறுவிய ராமுலஸ் விட்டேகர், பொறியாளர் ராஜகோபாலன் வாசுதேவன் பத்மஸ்ரீ விருதினை பெறுகிறார்கள்.
- தெலங்கானாவை சேர்ந்த பி.வி.சிந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் இரண்டாவது முக்கிய சிவில் விருதான பத்ம விபூஷன் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமசந்திரன் நாகசுவாமிக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- பத்மஸ்ரீ விருது புதுச்சேரியைச் சேர்ந்த டெரகோட்டா கலைஞர் விகே முனுசாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- உத்தர பிரதேசத்தை சேர்ந்த சமூக சேவகர் முகமது ஷெரீஃப் என்பவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது.
- பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஜகதீஷ் லால் அவுஜாவுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஜாவத் அஹமத் டாக் (46) என்பவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர், பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோருக்கு பத்மபூஷண் விருதும், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், நடிகை கங்கனா ரனாவத் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பத்மவிபூஷண்: மோரீஷஸ் முன்னாள் பிரதமர் அனிருத் ஜெகந்நாத், பாடகர் சன்னுலால் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேருக்கு பத்மவிபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.
- பத்மபூஷண்: மத போதகர் மும்தாஸ் அலி, மறைந்த வங்கதேச தூதர் சையது முவாஸெம் அலி, பாடகர் அஜய் சக்ரவர்த்தி, சமூக சேவகர் அனில் பிரகாஷ் ஜோஷி உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்படவுள்ளது.
- பத்மஸ்ரீ: பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர், மருத்துவர் பத்மாவதி பந்தோபாத்யாய, பாடகர் அட்னான் சமி, தொழிலதிபர் பரத் கோயங்கா உள்ளிட்ட 118 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
பத்மஸ்ரீ விருது பெற்ற பிரிட்டன் எம்.பி பாப் ப்ளாக்மேன்
- கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த பிரிட்டன் ஹரோ ஈஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினரான பாப் ப்ளாக்மேனுக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்துள்ளது இந்திய அரசு.
மேரி கோம்: பத்ம விபூஷண் விருது
- மேரிகோம் “Unbreakable: an autobiography” என்னும் தலைப்பில் சுயசரிதை எழுதியுள்ளார்.
- மேரி கோமுக்கு 2003ல் அர்ஜுனா விருதும் 2006ல் பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. விளையாட்டு துறையில் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது 2009ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் பெற்றார். இப்போது இவருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது
- கர்நாடகாவில் தட்சிண கன்னடா பகுதியைச் சேர்ந்த ஆரஞ்சு பழ வியாபாரி ஹரேகலா ஹஜப்பா. தனது கிராமத்தில் ஏழைக் குழந்தைகளை படிக்க வைத்த ஆரஞ்சு பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.இவர் நியூபடப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
அத்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருது:
- பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பாடகர் அத்னன் சமிக்கு கடந்த 2016ம் ஆண்டு குடியுரிமை வழங்கப்பட்டு, அவருக்கு இப்போது பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டிற்கான கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பத்மஸ்ரீ விருது பத்மபூஷன் விருது மற்றும் பத்மவிபூஷன் விருது கொடுக்கப்பட்டுள்ளது.
Check All Month Current Affairs
Download 26 to 31st Current Affairs PDF
Jan 26 to 31 Current Affairs PDF
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.
| No | Date | Download link |
|---|---|---|
| 1 | 1.01.2020 | Download PDF |
| 2 | 2.01.2020 | Download PDF |
| 3 | 3.01.2020 | Download PDF |
| 4 | 4.01.2020 | Download PDF |
| 5 | 5.01.2020 | Download PDF |
| 6 | 6.01.2020 | Download PDF |
| 7 | 7.01.2020 | Download PDF |
| 8 | 8.01.2020 | Download PDF |
| 9 | 9.01.2020 | Download PDF |
| 10 | 10.01.2020 | Download PDF |
| 11 | 11.01.2020 | |
| 12 | 12.01.2020 | |
| 13 | 13.01.2020 | |
| 14 | 14.01.2020 | |
| 15 | 15.01.2020 | |
| 16 | 16.01.2020 | |
| 17 | 17.01.2020 | |
| 18 | 18.01.2020 | |
| 19 | 19.01.2020 | |
| 20 | 20.01.2020 | |
| 21 | 21.01.2020 | |
| 22 | 22.01.2020 | |
| 23 | 23.01.2020 | Download |
| 24 | 24.01.2020 | Download |
| 25 | 25.01.2020 | Download |
| 26 | 26.01.2020 | Download |
| 27 | 27.01.2020 | Download |
| 28 | 28.01.2020 | Download |
| 29 | 29.01.2020 | Download |
| 30 | 30.01.2020 | Download |
| 31 | 31.01.2020 | Download |