Athiyaman Team Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(January 23- 25th Current Affairs 2020 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : Jan 23 -25th Current Affairs.
முக்கியமான நாட்கள்
சர்வதேசக் கல்வி தினம் – ஜனவரி 24
- இந்தத் தினமானது 2018 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது.
- 2020 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் – ‘மக்கள், உலகம், வளர்ச்சி மற்றும் அமைதிக்கான கற்றல்’ என்பதாகும்.
- இந்தத் தினமானது மனித நல்வாழ்வு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான முக்கிய காரணியாகத் திகழும் கல்வியின் சிறப்பை உணர்த்தும் விதமாக அனுசரிக்கப்பட்டது.
தேசியப் பெண் குழந்தைகள் தினம் – ஜனவரி 24
- சர்வதேசப் பெண் குழந்தைகள் தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகின்றது.
- மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தேசியப் பெண் குழந்தைகள் வாரத்தை அனுசரிக்கவுள்ளது.
- இந்தத் தினமானது 2008 ஆம் ஆண்டில் மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
- நாட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் அதிக ஏற்றத்தாழ்வுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
தேசிய சுற்றுலா தினம் – ஜனவரி 25
- நாட்டின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு அளிக்கும் சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தினால் நிறுவப்பட்டது.
- ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலாத் தினத்தை (செப்டம்பர் 27) கொண்டாடுவதில் இந்தியாவும் பங்கேற்கின்றது.
தேசிய வாக்காளர் தினம் – ஜனவரி 25
- தேசிய வாக்காளர் தினத்தைக் கொண்டாடுவதன் நோக்கம் இளைஞர்களுக்கு வாக்களிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
- இத்தின அனுசரிப்பானது 2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- இத்தினமானது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India – ECI) நிறுவன நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் படுகின்றது.
- 2020 ஆம் ஆண்டின் தேசிய வாக்காளர் தினத்தின் கருப்பொருள் ‘ஒரு வலுவான ஜனநாயகத்திற்கான தேர்தல் அறிவு’ என்பதாகும்.
சர்வதேச சுங்க தினம் – ஜனவரி 26
- இந்தத் தினமானது 1953 ஆம் ஆண்டில் சுங்க ஒத்துழைப்பு மன்றத்தின் (Customs Cooperation Council – CCC) தொடக்க அமர்வு பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற நாளை நினைவு கூர்கின்றது.
- சமூகம், பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தேவைகள் குறித்த செயல்களின் மையமாக இருக்கும் ஒரு நிலையான எதிர்காலத்தை நோக்கிய சுங்கத்தின் பங்களிப்புகளுக்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
- இந்நாளுக்கான கருப்பொருள் – “மக்கள், வளர்ச்சி மற்றும் கிரகத்திற்கான நிலைத் தன்மையை வளர்ப்பதற்கான சுங்கம்” என்பதாகும்.
Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course SI Test Batch
NTPC Video Course RRR Test Batch RRB Video Course Other Video Course
சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள்
- இந்திய விடுதலைப் போரில் மிக முக்கியமான தலைவரான சுபாஷ் சந்திர போஸின் 123-வது பிறந்ததின நாள் இன்று.
- ஜானகிநாத் – பிரபாவதிக்கு ஒன்பதாவது மகனாக 1887ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் நாள் ஒரிஸாவில் கட்டாக் நகரில் கோதனியா என்னும் ஊரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார்.1943ல் சிங்கப்பூரில் சுதந்திர அரசுக்கான பிரகடனத்தை நேதாஜி வெளியிட்டார்.
கரோனா வைரஸ்
- சீனாவில் பெய்ஜிங் (வுஹான் நகரில்) என்ற இடத்தில கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அங்கு நடக்கவிருந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட சார்ஸ் வைரஸ்சின் வகையான கரோனா வைரஸ் சீனாவில் தற்போது பரவி வருகிறது.
- ஜப்பானில் நடப்பாண்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன.
ககன்யான் திட்டம்
- இஸ்ரோ முதன்முதலாக ‘வியோம் மித்ரா’ என்ற பெண் ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்த ரோபோ 2021ஆம் ஆண்டில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில், விண்வெளி வீரர்களுக்கு உதவி செய்யும்.
- ககன்யான் திட்டத்தில் வீரர்களை அனுப்புவதற்கு முன்னதாக வியோம் மித்ரா விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது.
கிரீஸின் அதிபர்
- கிரீஸின் அதிபராக முதல் முறையாக பெண் ஒருவர் 63 வயதான கேத்ரினி தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- கிரீஸின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேத்ரினி அந்நாட்டின் மூத்த நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர்.
தேசிய ஊடக விருது
- மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராமுக்கு அவரது 40 ஆண்டுகால பத்திரிகைத்துறை சேவையை பாராட்டி கேரள ஊடக அகாடமியின் சார்பில் தேசிய ஊடக விருது வழங்கப்படுகிறது.
- இந்த விருதை மார்ச் மாதம் கொச்சியில் நடக்கும் ஊடக மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்க உள்ளார்.
24/1/2020
காய்கறிகள் உற்பத்தி
- கடந்த 2018-19 நிதியாண்டில் காய்கறிகள் உற்பத்தியில் 29.55 மில்லியன் டன்கள் அளவிற்கு காய்கறி உற்பத்தி செய்து மேற்குவங்க மாநில முதலிடம் வகிக்கிறது.நாட்டின் மொத்த காய்கறிகள் உற்பத்தியில் மேற்குவங்கத்தின் பங்கு 15.9 சதவீதமாகும்.
- உத்தர பிரதேசத்தில் 27.70 மில்லியன் டன்கள் அளவிற்கு காய்கறிகள் உற்பத்தி செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. நாட்டின் காய்கறிகள் உற்பத்தியில் உத்தர பிரதேசம் 14.9 சதவீதமாகும்.
- நாட்டின் காய்கறிகள் உற்பத்தியில் 9.6 சதவீதத்துடன் 3 மத்திய பிரதேசம் 3-வது இடத்தில் உள்ளது. 9 சதவீத காய்கறிகள் உற்பத்தியில் பிஹார் 4-வது இடத்தில் உள்ளது.
இந்தியா
பொலிவுறு நகரத் திட்டம்
- பொலிவுறு நகரத் திட்த்தின் (ஸ்மாா்ட் திட்டம்) கீழ் கோவை, உக்கடத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்துக்கு மத்திய அரசின் விருது வழங்கப்பட்டது.
- ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொலிவுறு நகரங்களுக்கான மூன்றாவது உச்சி மாநாட்டில் கோவை மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் இந்த விருதைப் பெற்றுக்கொண்டாா்.
உலக பொருளாதார மாநாடு
- உலக பொருளாதார மாநாடு-2020, 50-ம் ஆண்டு மாநாடு ஸ்விட்சா்லாந்து டாவோஸ் நகரில் நடைபெற்றது. இதில் சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) தலைவா் கிறிஸ்டலினா ஜியோா்ஜிவா
பிரேசில் அதிபா்
- நாட்டின் 71-ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறதுஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வழக்கம்.
- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றபோது, 2020 குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரேசில் அதிபா் ஜெய்ர் போல்சனாரோவுக்கு அழைப்பு விடுத்தார்.
- தில்லியில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபா் பொல்சொனரோ கலந்து கொள்கிறாா்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
- பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்தடைந்தார்.
- புது தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி – பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ முன்னிலையில் இரு நாடுகள் இடையே சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் கனிமவள அமைச்சகத்தின் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்திற்கும், பிரேசில் நாட்டின் கனிமவளம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் பிரேசில் புவியியல் ஆய்வு நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட நிலவியல் மற்றும் கனிமவளத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புராஸ்கர் விருது 2020
- மத்திய உள்துறை அமைச்சகமானது 2020 ஆம் ஆண்டிற்கான சுபாஷ் சந்திரபோஸ் ஆப்தா பிரபந்தன் புராஸ்கர் விருது பெறும் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.
- இந்த விருதானது நிறுவனப் பிரிவில் உத்தரகாண்ட் மாநிலத்தின் பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மை மையத்திற்கும் தனிநபர் பிரிவில் குமார் முன்னன் சிங் என்பருக்கும் வழங்கப்பட உள்ளது.
- இது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23 ஆம் தேதியன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவிக்கப்படுகின்றது.
- இந்த விருதானது பேரிடர் மேலாண்மைத் துறையில் இந்தியாவில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் செய்த சிறந்தப் பணிகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- குமார் முன்னன் சிங், 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது செய்த பாராட்டத் தக்கப் பணிகளை அங்கீகரிப்பதற்காக 2005 ஆம் ஆண்டில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிறுவன உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
Check All Month Current Affairs
Download 23rd &- 25th Current Affairs PDF
Jan 23rd & 25th Current Affairs PDF
Athiyaman Team, the best Coaching Center (TNPSC Online Coaching Class) in Tamilnadu for all competitive exams. We are providing Best online coaching for TNPSC Group Exams – Group 2 Prelims, Group 2A, Group 4 & VAO, RRB Railway Exams – RRB Group D, RRB ALP RRB Level 1, RRB NTPC, RPF/RPSF Exams, TNUSRB Exams – TN Police Police constable (PC) & Taluk SI Exam, TN Forester, Forest Guard, Forest Watcher Exams.
No | Date | Download link |
---|---|---|
1 | 1.01.2020 | Download PDF |
2 | 2.01.2020 | Download PDF |
3 | 3.01.2020 | Download PDF |
4 | 4.01.2020 | Download PDF |
5 | 5.01.2020 | Download PDF |
6 | 6.01.2020 | Download PDF |
7 | 7.01.2020 | Download PDF |
8 | 8.01.2020 | Download PDF |
9 | 9.01.2020 | Download PDF |
10 | 10.01.2020 | Download PDF |
11 | 11.01.2020 | |
12 | 12.01.2020 | |
13 | 13.01.2020 | |
14 | 14.01.2020 | |
15 | 15.01.2020 | |
16 | 16.01.2020 | |
17 | 17.01.2020 | |
18 | 18.01.2020 | |
19 | 19.01.2020 | |
20 | 20.01.2020 | |
21 | 21.01.2020 | |
22 | 22.01.2020 | |
23 | 23.01.2020 | Download |
24 | 24.01.2020 | Download |
25 | 25.01.2020 | Download |
26 | 26.01.2020 | Download |
27 | 27.01.2020 | Download |
28 | 28.01.2020 | Download |
29 | 29.01.2020 | Download |
30 | 30.01.2020 | Download |
31 | 31.01.2020 | Download |
Please upload daily current affairs