Daily Current Affairs – September 29th to 30th – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (Sep 29th to 30th)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  Sep 29th to 30th

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

வில்வித்தை உலக கோப்பை

துருக்கியில் சாம்சனில் நடந்த வில்வித்தை உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மூன்று பதக்கங்களை வென்றது.

தீபிகா குமாரி பெண்களுக்கான பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அபிஷேக் வர்மா ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

அபிஷேக் வர்மா & ஜோதி சுரேகா வென்னெம் கலப்பு அணி பிரிவில் வெள்ளி வென்றனர்.

 

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டி

யுவராஜ் வத்வானி 25வது ஆசிய இளையயோர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

 

ஃபார்முலா ஒன் சாம்பியன்ஷிப்

லூயிஸ் ஹாமில்டன் ஃபார்முலா ஒன் சாம்பியன்ஷிப்பில் ரஷியன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.

 

கோல்ஃப் ரைடர் கோப்பை

ஐரோப்பா அமெரிக்காவை வீழ்த்தி கோல்ஃப் ரைடர் கோப்பையை மீண்டும் வென்றது.

 

ஆசியா கோப்பை

இந்தியா வங்கதேசத்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆசியா கோப்பையை ஏழாவது முறையாக கைப்பற்றியது.

 

முக்கிய தினங்கள்

 

செப்டம்பர் 30 – சர்வதேச மொழிபெயர்ப்பு நாள்

ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு செப்டம்பர் 30 ம் தேதி  உலக சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் (ITD) கொண்டாடப்படுகிறது.

இது ஐந்தாம் நூற்றாண்டின் வடகிழக்கு இத்தாலியாவின் வாழ்ந்த புனித ஜெரோம் என்பவரின் நினைவாக கொண்டாடப்படுகிறது.. இவர் பைபிளை (புதிய ஏற்பாடு) கிரேக்க மொழியிலிருந்து லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர்.

2018 கருப்பொருள் : Democracy under Strain: Solutions for a Changing வேர்ல்ட்

 

மாநில செய்திகள்

 

186 கி.மி அமைதிக்கான பேரணி

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழாவில் பல்வேறு மாநிலங்களில் மாவோயிச கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட 150 க்கும் மேற்பட்ட மக்கள், ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து சட்டிஸ்கர் வரையிலான 186 கி.மீ  ‘அமைதி பாதயாத்திரை’ என்னும் அமைதிக்கான பேரணியில் கலந்துகொண்டனர்.

 

தெலுங்கு பைபிள் 

ஆந்திரவில் உள்ள தேவாலையங்கள் இந்த ஆண்டு பைபிளை கிரேக்க மொழியிலிருந்து தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்து 200 ஆண்டுகள் ஆனதை கொண்டாடினார்கள்

 

ராஜ்கோட்டில் அமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம்

ராஜ்கோட்டில் ஆல்ஃபிரட் உயர்நிலை பள்ளியில் மகாத்மா காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி  திறந்துவைத்தார்.

 

கேரளாவின் மின்னூட்டும் இலக்கு 

கேரளா 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வகுப்பு மோட்டார் வாகனங்களையும் முழுவதுமாகத் மின்னூட்டு நிலைக்கு மாற்ற இலக்கு நிர்ணயம் கொண்டுள்ளது.

 

காந்தியின் இதயம் தேசிய அருங்காட்சியகத்தில் 

 புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் தேச தலைவர் காந்தியின் 150 பிறந்த நாள் விழாவை நினைவுகூரும் வகையில் காந்தியின் இதயம் துடிப்பது போல டிஜிட்டல் கிட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

மெத்தனாலை சமையல் எரிபொருளாக மாற்ற திட்டம்

அசாம் பொதுத்துறை  பெட்ரோகெமிக்கல் லிமிடெட் திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயுவுக்கு மாற்றாக  சுத்தமான, மலிவான மெத்தனாலை அறிமுகம் செய்ய இந்தியாவில் முதன்முதலில திட்டமிட்டுள்ளது . இது அக்டோபர் 5 அன்று தொடங்கப்படும்.

 

 திட்டங்கள்

 

ஊதிய இழப்பீட்டுத் திட்டம்

மாநிலத்தின் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊதிய இழப்பீட்டுத் திட்டத்தை வழங்கும் முதல் இந்திய மாநிலமாக அசாம் திகழ்கிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.12,000 ஆனது 4 தவணைகளில் வழங்கப்படும். இதனுடன் மகப்பேறு விடுப்பும் வழங்கப்படும்

கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறந்த ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து துணைப் பொருட்களை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.


பாதுகாப்பு செய்திகள்

 

ரஷ்யாவிற்கு மிக் -21 போர் ஜெட் விமானம் பரிசு

ரஷ்யாவிற்கு மூன்று மிக் -21 போர் விமானங்களை பரிசாக வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இது எதிர்வரும் இந்தியா-ரஷ்யா இருதரப்பு உச்சிமாநாட்டின் ஒரு முக்கிய அம்சம்

 

அறிவியல் செய்திகள்

 

TB பாக்டீரியாவைக் கொல்ல புதிய அணுகுமுறை

பெங்களூரில் உள்ள இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் (ஐஐஎஸ்சி) இன் பேராசிரியர் அமித் சிங் தலைமையிலான பல நிறுவன குழு முதல் முறையாக ஒரு புரதம் (WhiB4), TBயை ஏற்படுத்தும் பாக்டீரியாவின் டி.என்.ஏ வை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் மூலம் கட்டுப்படுத்தும் என கண்டறிந்துள்ளது.

 

ஒப்பந்தங்கள்

 

நீர் நிர்வாகம் மீது கோவா ஒப்பந்தம்

நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் மேலாண்மைக்கான பொதுவான முன்முயற்சிகளை உருவாக்க போர்த்துகீசிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கும் கோவாவின் பொதுப்பணித் துறைக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை (MoU) கையெழுத்திடப்பட்டது.

 

நியமனங்கள்

 

என். ரவி, விஜய் குமார் சோப்ரா என்பவர்  பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் தலைவர் மற்றும் துணைத் தலைவராக (PTI) நியமிக்கப்பட்டார்.

ரஜினி காந்த் மிஸ்ரா என்பவர் எல்லை பாதுகாப்புப் படையின் பொது இயக்குனராக (பிஎஸ்எஃப்) நியமிக்கப்பட்டார்.

அனில் சந்திர புனிதா என்பவர்  ஆந்திர மாநிலத்தின் அடுத்த தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

 

 


 Download Daily Current Affairs [2018- Sep – 29 & 30]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: