காந்தி இர்வின் ஒப்பந்தம் 1931 (மார்ச் 5 1931)
லண்டனில் நடைபெற்ற 2-வது வட்டமேசை மாநாட்டிற்கு முன்னதாக 1931 மார்ச் 5 அன்று மகாத்மா காந்தி & இந்தியாவுக்கான வைஸ்ராயான இர்வின் பிரபு ஆகியோருக்கிடையே கையெழுத்திடப்பட்ட அரசியல் ஏற்பாடே இர்வின் ஒப்பந்தமாகும். உப்பு வரியை நீக்குதல் போன்றவை இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாகும்.
இந்திய தேசிய காங்கிரஸ் வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்ளவும் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திக் கொள்ளவும் சம்மதம் தெரிவித்தது.
ஒப்பந்தத்தின் அம்சங்கள்:
- காங்கிரசின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் அனைத்து சட்டங்களையும் திரும்பப் பெறுதல் .
- வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களைத் தவிர மற்றவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுதல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதற்காக கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தல்
- உப்புவரியை நீக்குதல்
அதன் பிறகு 1931ஆம் ஆண்டு செப்டம்பர் – டிசம்பர் காலக்கட்டத்தில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் பங்கேற்றது. அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கவும், மதுபானம் மற்றும் வெளிநாட்டு துணிக்கடைகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தவும், இந்திய தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கவும் சத்தியாகிரகத்தில் பங்கேற்றவர்களின் சொத்துக்களை மீட்டெடுக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது,
கடற்கரைப் பகுதி அருகே உப்பு சேகரிக்கவும், அபராதத்தை நீக்கவும், ஒத்துழையாமை இயக்கம் காரணமாக அனைத்து ஊழியர்களுக்கும் கருணை அடிப்படையில் சிகிச்சை அளிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.