தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் ஒரு வழியாக பல மாதங்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.

இன்னும் ஒரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். இரண்டு கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. வேட்புமனுத்தாக்கல் டிசம்பர் 6ம் தேதி துவங்கும்.வேட்புமனுத்தாக்கல் தாக்கல் செய்ய கடைசி நாள் டிசம்பர் 13. வேட்புமனுத்தாக்கலை திரும்ப பெறுதல் டிசம்பர் 18. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2, 2020ல் நடக்கும்

வார்டு உறுப்பினர்கள் , பதவி ஏற்பு, கூட்டம் ஜனவரி 6ம் தேதி நடக்கும். ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவரின் தேர்தலுக்கான மறைமுக கூட்டம் நாள் ஜனவரி 11.

வேட்புமனு தாக்கல்: டிசம்பர் 6

வேட்புமனு கடைசி நாள்: டிசம்பர் 13

வேட்புமனுக்கள் மீது பரிசீலனை: டிசம்பர் 16

முதல்கட்ட வாக்குப்பதிவு: டிசம்பர் 27

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: டிசம்பர் 30

தேர்தல் முடிவுகள்: ஜனவரி 2, 2020

31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: