பூலித்தேவர் (சுதேசி அரசுகளின் கூட்டணி அமைத்தவர்)
- 10-வது தலைமுறையில் 1715-ல் நெற்கட்டான் செவ்வலில் பிறந்த பூலித்தேவர் 1726-ல் முடி சூட்டப்பட்டு அரசனானார்.
- 12 வயதில் போர் பயிற்சி, வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சுருள் பட்டாசுழற்றல், குதிரை ஏற்றம் மற்றும் யானை ஏற்றம் ஆகிய பயிற்சிகளை பெற்று தன்னை பலப்படுத்திக் கொண்டார்.
- மேற்கு தொடர்ச்சி மலைகளில் புலி வேட்டையாடுவது அந்த வீரனுக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது.
- வீரத்துக்கு உதாரணமாக மக்களின் நம்பிக்கையாக இருந்தார் பூலித்தேவர்.
- பூலித்தேவரின் விவேகம்நிறைந்த வேகத்துக்கு முன் ஆங்கிலேயர்களால் நிற்க முடிய வில்லை.
- வரி கேட்டு வந்த ஆங்கிலேய தளபதியை, “வரி தர மாட்டேன்” என சொல்லி எதிர்த்து நின்று போரிட்டு தோற்க செய்து விரட்டி அடித்தார் பூலித்தேவர்.
- ஆங்கிலேயர்களை எதிர்க்க பாளையக் காரர்களின் ஒற்றுமையே தேவையாகும் என நினைத்தார்வீர மன்னர் பூலித்தேவர்.
- இந்தியாவின் வரலாற்றி லேயே, சுதேசி அரசுகளின் கூட்டணி அமைத்த பெருமையும், இவரைத்தான் சேரும்.
- இந்த ஒருங்கிணைப்பு முயற்சியில் கொல்லன் கொண்டான், சேத்தூர், வடகரை, ஊத்துமலை, தலைவன் கோட்டை மற்றும் திருவண்டபுரம் அரசும் கூட்டணியில் இணைந்து கொண்டன.
- 17 போர்கள் தொடர்ந்து கிழக்கு இந்திய கும்பினியின் படையை எதிர்த்து ஆங்கிலேயர் களை 15 போர் களில் தோற்க செய் தார் பூலித்தேவர்.
- 1761-ல் தொடங்கிய போர் 1767 வரை நீடித்தது.29 கோட்டைகள் அழிக்கப்பட்டன.
- மே மாதம் 1767-ல் கர்னல் டொனால்ட் கேம்ப்பெல் மற்றும் அவரது குழு வாசுதேவநல்லூர் கோட்டையை தாக்கியது. அவர்களின் பீரங்கி குண்டு கோட்டையின் சுவரில் ஒரு துளையை உருவாக்கியது.
- வீரர்கள் மண்ணையும், வைக்கோலையும் மட்டுமல்லாமல் தனது உடல்களை கொண்டு அந்த கோட்டை சுவற்றின் ஓட்டையை மறைத்து அடைத்தார்கள்.போர் ஒரு வாரம் தொடர்ந்தது.
- பிரிட்டிஷ் ராணுவம் கோட்டையை கைப்பற்றியது.
- பூலித்தேவரின் மனைவி மற்றும் குழந்தைகளை கோட்டையில் உயிருடன் எரித்தனர்.
- பூலித்தேவர் கைது செய்யப்பட்டார். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் பூலித்தேவர் வீரமும், தேசபக்தியும் பலருக்கு முன்னோடியாக இருந்தது.