RRB NTPC Revised results of all Pay Levels to be declared by the first week of April, 2022

RRB NTPC Revised results of all Pay Levels to be declared by the first week of April, 2022

ரயில்வே அமைச்சகம் கடந்த ஜனவரி 26ம் தேதி, பிறப்பித்த உத்தரவு எண் ERB-I/2022/23/06-ன் படி, CEN 01/2019  (தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகள்)  மற்றும் CEN RRC-01/2019 (Level-1) விண்ணப்பதாரர்களின் கவலைகள் குறித்து ஆலோசிக்கக்  குழு ஒன்றை அமைத்துள்ளது.  கீழ்கண்ட நடைமுறைகளைப்  பின்பற்ற ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

* CEN 01/2019 (தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகள்)இரண்டாம் நிலை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வுக்கு, 20 மடங்கு விண்ணப்பதார்கள் சம்பளப்  பிரிவு வாரியாகத்  தேர்வு செய்யப்படுவர்.

* ஏற்கனவே தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து தகுதியானவர்களாக இருப்பர்.

*  கூடுதல் விண்ணப்பதாரர்களின் பட்டியல், சம்பளப்  பிரிவு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

* ரயில்வே தேர்வு வாரியங்கள்  வாரியாக, ஒவ்வொரு சம்பள பிரிவுக்கும்,  2ம் நிலை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வுக்கான விண்ணப்தார்கள் ஒரே ஷிப்ட்-ல் இடம் பெறுவர். இது இயல்பாக்கத்தை அகற்றும். அதிக எண்ணிக்கை காரணமாக, ஒரே ஷிப்ட் சாத்தியம் இல்லை என்றால், விகிதச்சார  அடிப்படையில் இயல்பாக்கம் செய்யப்படும்.

*  CEN RRC-01/2019 (Level-1) ஒரே தேர்வாக இருக்கும். இரண்டாம் நிலை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு இருக்காது.

*  ரயில்வே தேர்வு வாரியங்கள்  வாரியாக முதல் நிலைத்  தேர்வு நடத்தப்படும். தேர்வுகளை விரைவாக நடத்தி முடிக்க, ஒவ்வொரு தேர்வு வாரியத்திலும், ஷிப்ட்களின் எண்ணிக்கையை குறைக்க அதிகபட்சத்  திறனை பயன்படுத்த பரிந்துரைக்கப்படும்.

* சதவீத அடிப்படையிலான இயல்பாக்கம், புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட ஷிப்ட்கள் இருக்கும் இடங்களில் இந்த முறை பயன்படுத்தப்படும்.

* முதல் நிலையின் பல பதவிகளுக்கு, இந்திய ரயில்வேயின் மருத்துவ கையேட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி மருத்துவ தரநிலைகள் பயன்படுத்தப்படும்.

* பொருளாதாரத்தில்  பின்தங்கிய பிரிவினின் கீழ் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு, கிடைக்கும் எந்தவித வருமானம் மற்றும் சொத்து சான்றிதழும் செல்லுபடியானதாகக்  கருதப்படும்.

CEN 01/2019 (தொழில்நுட்பம் அல்லாத பிரிவுகள்)  மற்றும் CEN RRC-01/2019 (Level-1)-க்கான அட்டவணை (தற்காலிகம்)

* அனைத்து சம்பளப்  பிரிவுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட முடிவுகள், 2022 ஏப்ரல் முதல் வாரம் அறிவிக்கப்படும்.

* 6ம் நிலை சம்பளத்துக்கான, 2ம் நிலை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு 2022, மே மாதம் நடத்தப்படும்.

* இதர சம்பளப்   பிரிவுகளுக்கான 2ம் நிலை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு நியாயமான இடைவெளிக்குப்பின் நடத்தப்படும்.

* 2ம் நிலை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வைத்  தவிர்க்க, முதல் நிலை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வுக்கு சிறப்பு நிபந்தனைகளுடன் மாற்றியமைக்கப்பட்ட  முறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு ஷிப்ட்டின் தேவை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதால், முதல் நிலை கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வை நடத்தக்  கூடுதல் உள்கட்டமைப்பு மற்றும் பொருட்களைப்  பயன்படுத்த வேண்டும். முதல்நிலை கம்ப்யூட்டர் தேர்வை கூடிய விரைவில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

* ஆகையால், முதல் நிலை கம்யூட்டர் தேர்வை 2022 ஜூலை முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: