தமிழ் பத்தாம் வகுப்பு – முக்கிய குறிப்புகள்

TNPSC தமிழ்  பத்தாம் வகுப்பு – முக்கிய குறிப்புகள்

 

திருக்குறளைப் போற்றிப் பாடப்படும் நூல் திருவள்ளுவமாலை
திருக்குறள் குறள் வெண்பாக்களால் ஆன நூலாகும்.
இணையில்லா முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர் பாரதிதாசன்
ஏலாதி பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
கணிமேதாவியாரின் காலம் சங்கம் மருவிய காலம்.
மருந்துப் பொருள்களால் அமையப்பெற்ற இரு நூல்கள் திரிகடுகம், ஏலாதி
இளங்கோவடிகள் சேர நாட்டைச் சேர்ந்தவர்.
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர் பாரதியார்.
குடும்ப விளக்கு பாரதிதாசன் படைத்த குறுங்காவியங்களுல் ஒன்று
ஆறு காண்டங்களைக் கொண்ட நூல் கம்பராமாயணம்.
சரசுவதி அந்தாதி கம்பர் இயற்றிய நூல்களுள் ஒன்று.
கம்பரைப் புரந்தவர் சடையப்ப வள்ளல்.
“நல்” என்னும் அடைமொழி பெற்ற நூல் நற்றிணை.
பன்னாடு தந்த மாறன் வழுதி நற்றிணையைத் தொகுப்பித்தவர்.
நற்றிணை எட்டுத் தொகை நூல்களைச் சார்ந்தது.
சேக்கிழார் பெருமான் அருளியது பெரியபுராணம்.
தம் வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர் அப்பூதியடிகளார்
பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ எனப்பாடியவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.
திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர் மூத்த அறிவுடையார்.
அரியவற்றுள் எல்லாம் அரிது பெரியாரைப் பேணித்தமராக் கொளல்.
முதலில்லார்க்கு ஊதியம் இல்லை
திருநாவுக்கரசர் காலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டு.
“நாமார்க்கும் குடியல்லோம் என்னும் பாடல் பாரதியாரை “அச்சமில்லை அச்சமில்லை எனப்பாடத்தூண்டியது.
சீறாப்புராணம் மூன்று காண்டங்களைக் கொண்டது.
“கேழல்” என்பதன் பொருள் பன்றி
கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
நெய்தல் கலியைப் பாடியவர் நல்லந்துவனார்.
போற்றாரைப் பொறுத்தல் என்பது பொறை எனப்படும்.

ORDER TNPSC TAMIL BOOKS

WHATSAPP- 8681859181

நந்திக் கலம்பகம் 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
“பணை” என்னும் சொல்லின் பொருள் மூங்கில்.
பெருமாள் திருமொழியில் நூற்றைந்து பாசுரங்கள் உள்ளன.
குலசேகராடிநவார் பாடல் திருவியற்பா தொகுப்பில் உள்ளது.
மாணிக்க வாசகர் பிறந்த ஊர் திருவாதவூர்.
மாணிக்க வாசகர் பாடல்கள் எட்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன.
மாணிக்க வாசகர் கட்டிய கோவில் திருப் பெருந்துறையில் உள்ளது.
மாணிக்க வாசகர் அரிமர்த்தன பாண்டிய மன்னரிடம் தலைமையமைச்சராகப்பணியாற்றினார்.
ஜி.யு போப் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்.
திருக்குறள் இலத்தீன், கிரேக்கம், ஆங்கிலம் முதலான உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளில் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் உள்ளன.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எடீநுதுவர் எடீநுதாப் பழி
இரட்டைக் காப்பியங்கள் என்பன சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஆகும்.
நற்றிணை ஒன்பதடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டு அடி பேரெல்லையும் கொண்ட நூல்.
“அரி” என்னும் சொல்லின் பொருள் நெற்கதிர்.
போலிப் புலவர்களைத் தலையில் குட்டுபவர் அதிவீரராமபாண்டியன்.
போலிப் புலவர்களின் தலையை வெட்டுபவர் ஒட்டக்கூத்தர்.
அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள்.
திருநாவுக்கரசரின் தமக்கையார் திலகவதியார் ஆவார்.
திருநாவுக்கரசர் அருளிய பாடல்கள் தேவாரம் என அழைக்கப்படுகிறது.
சீறாப் புராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர்.
உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதி
தார் வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போன்றிருந்தேனே.
உலகத் தமிடிநப பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமானவர் சாலை இளந்திரையன்.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் திருவாய்மொழி குலசேகரர் பாடியதாகும்.
ஈஸ்ட்மன் – படச்சுருள்
எடிசன் – ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவி
எட்வர்டுமைபிரிட்சு – இயக்கப்படம்
வால்ட் டிஸ்னி – கருத்துப்படம்
சத்திய சோதனை – காந்தியடிகள்
பகவத்கீதை – இந்து சமய நூல்
திருக்குறள் – திருவள்ளுவர்
பைபிள் – கிறித்துவ சமய நூல்
வினையே ஆடவர்க்குயிர் – குறுந்தொகை
முந்நீர் வழக்கம் மகடூ உவோடில்லை – தொல்காப்பியர்
உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே – திருமூலர்
கைத்தொழில் ஒன்றைக்கற்றுக்கொள் – நாமக்கல் கவிஞர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: