தொழிலாளர் நலத்துறை இளநிலை உதவியாளர் பணி 177 Post

Tamil Nadu Construction Workers Welfare Board Recruitment for Junior Assistant, Data Entry Operator (DEO) & Various Posts

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்

 வேலைவாய்ப்பு விவரம் :    

தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள்
நல வாரிய தலைமை அலுவலகம், அனைத்து மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக
பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்கள் மற்றும் துயில் கூடங்களில் காலியாக உள்ள இளநிலை
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்புவதற்கு
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிட விவரங்கள் : 

இளநிலை உதவியாளர் – 66 

கணினி இயக்குபவர் – 111 

வயது வரம்பு :  01.07.2018 அன்றுள்ளபடி

வ.
எண்.
விண்ணப்பதாரர்களின் இன வகைகள் குறைந்தபட்ச வயது
(பூர்த்தியடைந்து
இருக்க வேண்டும்)
அதிகபட்ச வயது
(பூர்த்தியடைந்து
இருக்க கூடாது)
1ஆதி திராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்)
பட்டியல் பழங்குடியினர் மற்றும் அனைத்து
வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள்
18 வயது35 வயது
2பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும்
பிற்படுத்தப்பட்ட வகுப்பு/சீர் மரபினர்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்)
18 வயது32 வயது
3ஏனையோர்18 வயது30 வயது

கல்வி தகுதி :

இளநிலை உதவியாளர்:

பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி

கணினி இயக்குபவர்:

(i) பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி

(ii) கணினியில் சான்றிதழ் அல்லது பட்டயப் படிப்பு

(iii)கணினியில் ஒரு மணி நேரத்தில் 8000 எழுத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு
செய்யும் திறமை

சம்பளம் ஏற்ற முறை : ரூ 19500 – 62000/-

முக்கிய தேதிகள் :

விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டிய கடைசி நாள். 02.11.2018 மாலை 5.45 மணி வரை

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் புகைப்படம் ஓட்டி, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து என்ற முகவரிக்கு “The Secretary,
TNCWWB” என்ற பெயரில் ரூ.100/-க்கான வங்கி வரைவோலை  (DD payable at Chennai) இணைத்து அனுப்பிவைக்க வேண்டும். 

செயலாளர், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், 8, வள்ளுவர் கோட்டம்
நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034

விண்ணப்பிக்கும் கட்டணம் :

மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

 

குறிப்பு:
1. ஆதி திராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர்/சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) ஆகிய
வகைகளைச் சார்ந்தோர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள்
ஆகியோர் குறைந்தபட்ச பொதுக்கல்வித்தகுதியைக் காட்டிலும் மேற்பட்ட கல்வித்தகுதியைப்
பெற்றிருப்பின் அதாவது புகுமுக வகுப்பு/மேல்நிலைப்பள்ளி/பட்டயப்படிப்பு/பட்டப்படிப்பு
ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

தமிழ் மொழியில் தகுதி

17.10.2018 நாளிட்ட அறிவிக்கையன்று விண்ணப்பதாரர்கள் போதுமான தமிழ்அறிவு பெற்றிருக்க
வேண்டும்

தெரிவு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வில் (பத்தாம் வகுப்பு தரம்) பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் சான்றிதழ்
சரிபார்ப்பிற்குத் வாரியத்தால் அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் உத்தேசப்பட்டியல்
பதவிவாரியாக தனித்தனியே இணையதளத்தில் வெளியிடப்படும். மூலச்சான்றிதழ்களின்
சரிபார்ப்பிற்கு பின்னர், தகுதியான விண்ணப்பதாரர்கள் அவர்கள் சார்ந்த பிரிவு,
காலிப்பணியிடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களின் தரவரிசைப்படி கலந்தாய்வில்
பங்கேற்க அனுமதிக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதற்கும், சான்றிதழ்
சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்விற்கும் தங்களது சொந்த செலவில் வரவேண்டும்.
கணினி இயக்குபவர் பதவிக்கு கணினி அறிவு மற்றும் கணினியில் ஒரு மணி நேரத்தில்
8000 எழுத்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறனை கண்டறியும் வகையில்
கூடுதலாக ஒரு தேர்வு நடத்தப்படும்.

 

இளநிலை உதவியாளர் பதவிக்கான விண்ணப்பம் :

Download Application Here- Download

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் (சுய சான்றொப்பம் இடப்பட்டது)
1. வங்கியிலிருந்து பெறப்பட்ட வரைவோலை (னு.னு) அசல்
2. வயது சான்றிதழ் நகல் (பிறப்பு சான்றிதழ் / ஆதார் அட்டை / மாற்று சான்றிதழ்)
3. ஆளறிசான்றிதழ் நகல் (ஆதார் அட்டை / வாக்காளர் அட்டை / குடும்ப அட்டை)
4. நிரந்தர இருப்பிட முகவரி சான்றிதழ் நகல் (ஆதார் அட்டை / வாக்காளர் அட்டை / குடும்ப
அட்டை)
5. சுய முகவரியிட்ட ரூ.25-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய அஞ்சல் உறை
6. கல்வித்தகுதி சான்றிதழ் நகல்
7. சாதி சான்றிதழ் நகல்
8. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பின் அதன் நகல்
9. தமிழ்வழி படித்தற்கான சான்றிதழ் நகல்
10. முன்னுரிமை (ஞசiடிசவைல) கோரின் தகுந்த சான்றிதழ்கள் நகல் (ஆதரவற்ற விதவை/
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இதர முன்னுரிமைகள்)
11. மாற்றுத் திறனாளியாகயிருப்பின் அதற்குரிய சான்றிதழ் நகல் (உடல் ஊனத்திற்கான அளவு
40 விழுக்காட்டிற்கு குறைவாக இருத்தல் கூடாது)

கணினி இயக்குபவர் பதவிக்கான விண்ணப்பம் :


இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் (சுய சான்றொப்பம் இடப்பட்டது)
1. வங்கியிலிருந்து பெறப்பட்ட வரைவோலை (DD) அசல்
2. வயது சான்றிதழ் நகல் (பிறப்பு சான்றிதழ் / ஆதார் அட்டை / மாற்று சான்றிதழ்)
3. ஆளறிசான்றிதழ் நகல் (ஆதார் அட்டை / வாக்காளர் அட்டை / குடும்ப அட்டை)
4. நிரந்தர இருப்பிட முகவரி சான்றிதழ் நகல் (ஆதார் அட்டை / வாக்காளர் அட்டை / குடும்ப
அட்டை)
5. சுய முகவரியிட்ட ரூ.25-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய அஞ்சல் உறை
6. கல்வித்தகுதி சான்றிதழ் நகல்
7. தொழில்நுட்ப தகுதி (கணினி) சான்றிதழ் நகல்
8. சாதி சான்றிதழ் நகல்
9. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பின் அதன் நகல்
10. தமிழ்வழி படித்தற்கான சான்றிதழ் நகல்
11. முன்னுரிமை ( Priority) கோரின் தகுந்த சான்றிதழ்கள் நகல் (ஆதரவற்ற விதவை/
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் இதர முன்னுரிமைகள்)
12. மாற்றுத் திறனாளியாகயிருப்பின் அதற்குரிய சான்றிதழ் நகல் (உடல் ஊனத்திற்கான அளவு
40 விழுக்காட்டிற்கு குறைவாக இருத்தல் கூடாது)

Download  the application –Download

Tamil Nadu Construction Workers Welfare Board Recruitment for Junior Assistant, Data Entry Operator (DEO) & Various Posts

Official Notification – Download

5 thoughts on “தொழிலாளர் நலத்துறை இளநிலை உதவியாளர் பணி 177 Post

  1. Sc candidate s take a 100 rupee DD compalsory are not. For welfare board requirement of junior assistant job. Please kindly request this answer.

  2. Junior assistant tncwwb தேர்வு வைக்கப்பட்டுவிட்டதா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: