TNPSC latest News
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) நிரந்தர கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
ஆதார் எண்ணை கணக்குடன் இணைத்துவிட்டால், தேர்வர்கள் பல தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை நிரப்பும் சமயத்தில், ஒவ்வொரு முறையும் அவர்களது கல்வி மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
பிப்ரவரி 1 ஆம் தேதி, TNPSC-யில் நிரந்தரப் பதிவுக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வரும் 28ஆம் தேதிக்குள் இணைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியிருந்தது.
இதற்கிடையில், சுமார் 5550 பணிகளை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்விற்கு மார்ச் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்கிற அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே OTR கணக்குடன் ஆதாரை இணைத்த தேர்வர்கள் மீண்டும் இணைக்க தேவையில்லை என்பது குறிப்பிடதக்கது.