குரூப் 2, குரூப் 4 தேர்வு அறிவிப்பு- 27ம் தேதி டிஎன்பிஎஸ்சி கூட்டம்
TNPSC EXAM LATEST NEWS
சென்னையில் வருகிற 27ம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணைய குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வு அறிவிப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது. திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அரசுத் துறை, மாநில பொது துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என்று அண்மையில் நடந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. இது அனைத்து தரப்பு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) இனி நடத்த உள்ள அனைத்து தேர்வுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேர்வுகளில் அதிரடி மாற்றத்தை கொண்டுவர உள்ளது.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN CURRENT AFFAIRS TELEGRAM LINK
அதாவது, டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4, விஏஓ உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கு முன்பாகவும் தமிழ் மொழித்தாள் தேர்வு முதலில் நடத்த உள்ளது. அந்தத் தேர்வில் 45 மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்றால் மட்டுமே, பொதுத் தேர்வு விடைத்தாள்களை திருத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பான விரிவானை அறிக்கையை தயாரித்து டிஎன்பிஎஸ்சி தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. அரசு அனுமதி கிடைத்ததும் புதிய நடைமுறை தேர்வுகளில் கட்டாயமாக்க உள்ளது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணைய குழு கூட்டம், டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் தலைமையில் வருகிற 27ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. இந்த கூட்டத்தில் தேர்வாணைய செயலாளர் உமா மகேஸ்வரி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா மற்றும் உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். டிஎன்பிஎஸ்சி ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் நடத்தப்படும் தேர்வுக்கான அட்டவணையை வெளியிடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
தேர்வுகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்துவதிலும் தாமதம் ஏற்பட்டது. எனவே, ஓராண்டு கால அட்டவணையில் அறிவிக்கப்பட்டவாறு தேர்வுகளை மீண்டும் எந்த தேதியில் நடத்துவது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் பட்டியலை டிஎன்பிஎஸ்சி கேட்டுள்ளது. அரசு அந்த பட்டியலை விரைவில் அளிக்கும் என்று தெரிகிறது. அதன் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 தேர்வுகளை எந்த தேதியில் நடத்துவது என்பதும் குறித்தும் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் அடிப்படையில் தேர்வுகளை நடத்துவது குறித்து முக்கிய அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிடும் என்று தெரிகிறது.