TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 14

TNPSC Group 4 & VAO Model Questions  வினா விடை தொகுப்பு-PART 14

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் 

நடப்பு செய்திகள் – 1’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.

நடப்பு செய்திகள் – 1

1. நூறு சதவீதம் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கியுள்ள முதல் இந்திய மாநிலம் எது?
அ. நாகாலாந்து
ஆ. மேகாலயம்
இ. கோவா
ஈ. குஜராத்

 

 

2. அடிக்கடி கொந்தளிக்கக்கூடிய மவுன்ட் மொராபி எரிமலை எந்த நாட்டில் உள்ளது?
அ. தென் ஆப்ரிக்கா
ஆ. இந்தோனேசியா
இ. ஜப்பான்
ஈ. எகிப்து

3. மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை பற்றிய ‘The Romance of Salt’ எனும் நூலை எழுதியவர் யார்?
அ. அனில் தார்கெர்
ஆ. அனில் கும்ப்ளே
இ. அனிருத்
ஈ. அமித் ஷா

4. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
அ. மகிந்தர் கிரி – சர்வதேச வனப் பாதுகாவலர் விருது
ஆ. சரண்குமார் லிம்பாலே – சரஸ்வதி சம்மான் விருது
இ. கமல் ஹாசன் – தாதா சாகிப் பால்கே விருது
ஈ. சாலி சாவோ – சிறந்த இயக்குநர், பாப்டா 2021 விருது

5. கீழ்க்கண்ட நாடுகளுள் QUAD (Quadrilateral Security Dialogue) அமைப்பில் இல்லாத நாடு எது?
அ. இந்தியா
ஆ. ஆஸ்திரேலியா
இ. அமெரிக்கா
ஈ. சீனா

6. அதிக தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியதில் முதலிடத்தில் உள்ள இந்திய மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளம்
இ. மகாராஷ்டிரம்
ஈ. பிஹார்

7. 2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின்படி இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
அ. 112 ஆ. 128
இ. 140 ஈ. 153

8. ‘Shantir Orgo Shena -2021’ (அமைதியின் முன்னோடி) என்கிற பன்னாட்டு ராணுவப் பயிற்சி எந்த நாட்டில் நடைபெற்றது?
அ. பாகிஸ்தான்
ஆ. நேபாளம்
இ. வங்கதேசம்
ஈ. இந்தியா

9. சர்வதேச மதி இறுக்கத்திற்கான விழிப்புணர்வு தினம் வருடந்தோறும் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
அ. ஏப்ரல் 2
ஆ. மே 8
இ. டிசம்பர் 10
ஈ. செப்டம்பர் 8

10. பாதுகாக்கப்பட்ட ஈர நிலமாக அறிவிக்கப்பட்ட ‘தால் ஏரி’ இந்தியாவில் எங்கு உள்ளது?
அ. உத்தராகண்ட்
ஆ. இமாசலப் பிரதேசம்
இ. அருணாசலப் பிரதேசம்
ஈ. ஜம்மு & காஷ்மீர்

11. எந்த இந்திய மாநிலத்தில் அனைத்துக் குடிமக்களுக்கும் முதன்முதலாக கட்டணமில்லாச் சுகாதாரக் காப்பீடு வசதி அளிக்கப்பட்டுள்ளது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளம்
இ. ராஜஸ்தான்
ஈ. குஜராத்

12. இந்தியாவில் எந்த மாநிலத்தில் உள்ள பலோஜி கிராமத்தில் முதன்முதலாகப் பண்ணை சார்ந்த சூரியசக்தி நிலையம் அமைந்துள்ளது?
அ. மத்தியப் பிரதேசம்
ஆ. ஜார்க்கண்ட்
இ. ராஜஸ்தான்
ஈ. குஜராத்

13. 35 ஆவது போர்ப்ஸ் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியல் 2021 இன்படி முதலிடத்தில் உள்ளவர் யார்?
அ. எலான் மஸ்க்
ஆ. ஜெப் பெசோஸ்
இ. பில் கேட்ஸ்
ஈ. வாரண் பப்பட்

14. ‘பித்ர – வத்’ என்கிற புத்தகப் படைப்புக்காக யாருக்கு தேவி சங்கர் அவஸ்தி விருது 2020 வழங்கப்பட்டது?
அ. அசுதோஷ் பரத்வாஜ்
ஆ. நந்தி கிஷோர் ஆசார்யா
இ. ராஜேந்திர குமார்
ஈ. அசோக் வாஜ்பாய்

15. உலக ஹோமியோபதி தினம் வருடந்தோறும் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
அ. பிப்ரவரி 10
ஆ. மார்ச் 10
இ. ஏப்ரல் 10
ஈ. ஜுன் 10

16. கீழ்க்கண்ட எந்தப் போட்டியில் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்கிற சிறப்பை நேத்ரா குமணன் பெற்றார்?
அ. நீச்சல்
ஆ. படகோட்டுதல்
இ. துப்பாக்கிச் சுடுதல்
ஈ. பளுதூக்குதல்

17. 2021 இல் கும்பமேளா எங்கே நடைபெற்றது?
அ. அலகாபாத்
ஆ. ஹரித்வார்
இ. உஜ்ஜெய்னி
ஈ. நாசிக்

18. இந்தியாவின் ISRO நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்தCNES என்னும் நிறுவனத்துடன், மனிதனை விண்வெளிக்கு அணுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யான் திட்டத்தில் பணியாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ?
அ. அமெரிக்கா
ஆ. ரஷ்யா
இ. ஜெர்மனி
ஈ. பிரான்ஸ்

19. EIU (Economic Intelligence Unit), ஃபேஸ்புக் இரண்டும் இணைந்து 2021 இல் வெளியிட்ட இணையதள உள்ளடக்கக் குறியீட்டின்படி இந்தியாவும் எந்த நாடும் குறியீட்டு எண் 49 ஐ பகிர்ந்துகொண்டன?
அ. இந்தோனேசியா
ஆ. சீனா
இ. பின்லாந்து
ஈ. தாய்லாந்து

20. ஆர்மிடிஸ் திட்டம் என்பது என்ன?
அ. மனிதனின் விண்வெளி பயணத் திட்டம்
ஆ. மனிதனின் அண்டார்டிகா பயணத் திட்டம்
இ. மனிதனின் ஆர்க்டிக் பயணத் திட்டம்
ஈ. மனிதனின் ஆழ்கடல் பயணத் திட்டம்

TNPSC Group 4 & VAO Model Questions  வினா விடை தொகுப்பு-PART 14

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 1

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 2

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 3

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 4

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 5

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 6

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 10

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: