TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 17

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 17

 

  1. கோபாலகிருஷ்ண கோகலே இந்தியப் பணியாளர் சங்கத்தை எந்த ஆண்டில் நிறுவினார்?
    அ. 1900 ஆ. 1902
    இ. 1905 ஈ. 1907
  2. விதவை மறுமணத்தைச் சட்டமாக்குவதற்கு அதிகமாக உழைத்தவர் யார்?
    அ. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
    ஆ. ராஜாராம் மோகன்ராய்
    இ. எம்.ஜி. ரானடே
    ஈ. லாலா லஜபதி ராய்
  3. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
    அ. தயானந்த சரஸ்வதி – ஆரிய சமாஜம்
    ஆ. ராஜாராம் மோகன்ராய் – பிரம்ம சமாஜம்
    இ. ஆத்மாராம் பாண்டுரங்கா – பிரார்த்தன சமாஜ்
    ஈ. அன்னி பெசன்ட் – பகுஜன் சமாஜ்
  4. இந்தியாவின் வானம்பாடி என அழைக்கப்படுபவர் யார்?
    அ. அன்னி பெசன்ட்
    ஆ. அன்னை தெரசா
    இ. சரோஜினி நாயுடு
    ஈ. அஞ்சலையம்மாள்
  5. கீழ்க்கண்ட எந்தப் பத்திரிகைக்கு பாரதியார் ஆசிரியராக பணியாற்றினார்?
    அ. நவ இந்தியா
    ஆ. சுதேசமித்திரன்
    இ. பாரத மாதா
    ஈ. தினமணி
  6. ராமகிருஷ்ண மடத்தின் தலைமையிடம் எங்குள்ளது?
    அ. மும்பை
    ஆ. கொல்கத்தா
    இ. சென்னை
    ஈ. டெல்லி
  7. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
    அ. நேதாஜி – ஐ.என்.ஏ
    ஆ. கோகலே – மிதவாதி
    இ. திலகர் – தீவிரவாதி
    ஈ. வினோபா பாவே – வந்தே மாதரம்
  8. பொருத்துக:
    A. ஒழுங்குமுறைச் சட்டம் – 1. 1784
    B. பிட் இந்தியச் சட்டம் – 2. 1773
    C. மிண்டோமார்லி சீர்திருத்த சட்டம் – 3. 1919
    D. மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டம் – 4. 1909
    அ. A – 1, B – 2, C – 4, D – 3
    ஆ. A – 2, B – 1, C – 3, D – 4
    இ. A – 2, B – 1, C – 4, D – 3
    ஈ. A – 1, B – 2, C – 3, D – 4
  9. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
    அ. வேதகாலத்திற்குத் திரும்புங்கள் – தயானந்த சரஸ்வதி
    ஆ. டெல்லி சலோ – நேதாஜி
    இ. தீண்டாமை என்பது ஒரு குற்றம் – காந்திஜி
    ஈ. சுதந்திரம் எனது பிறப்புரிமை – லாலா லஜபதிராய்
  10. கி.பி. 1857ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முகலாயப் பேரரசர் யார்?
    அ. முதலாம் பகதூர் ஷா
    ஆ. இரண்டாம் பகதூர் ஷா
    இ. இரண்டாம் அக்பர்
    ஈ. இவர்களில் எவருமில்லை
  11. திரு. வி.கல்யாணசுந்தரனார் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?
    அ. நவசக்தி
    ஆ. தேசாபிமானி
    இ. விடுதலை
    ஈ. வீரகேசரி
  12. இங்கிலாந்து தலைமை அமைச்சர் மேக்டோனால்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை எந்த ஆண்டில் அறிவித்தார்?
    அ. கி.பி. 1922 ஆ. கி.பி. 1928
    இ. கி.பி. 1932 ஈ. கி.பி. 1936
  13. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
    அ. முஸ்லிம் லீக் தொடக்கம் – 1906
    ஆ. சூரத் பிளவு – 1909
    இ. இரண்டாம் வட்ட மேசை நாடு – 1931
    ஈ. வெள்ளையனே வெளியேறு இயக்கம் – 1942
  14. இந்தியாவின் ஸ்தல சுய ஆட்சியின் தந்தை என வர்ணிக்கப்படுபவர் யார்?
    அ. கர்சான் பிரபு
    ஆ. லிட்டன் பிரபு
    இ. மேயோ பிரபு
    ஈ. ரிப்பன் பிரபு
  15. வந்தவாசி வீரர் என அழைக்கப்பட்டவர் யார்?
    அ. தாமஸ் ஆர்தர்
    ஆ. சர் அயர் கூட்
    இ. ராபர்ட் கிளைவ்
    ஈ. லாரன்ஸ்
  16. பனாரஸில் மத்திய இந்துப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?
    அ. மதன் மோகன் மாளவியா
    ஆ. லாலா லஜபதி ராய்
    இ. ஆசார்ய வினோபா பாவே
    ஈ. விவேகானந்தர்
  17. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
    அ. பூண்டி நீர்தேக்கம் – சத்தியமூர்த்தி
    ஆ. இந்தியாவின் பிஸ்மார்க் – சர்தார் வல்லபபாய் படேல்
    இ. பாகிஸ்தான் என்று பெயர் வைத்தவர் – முகமது அலி ஜின்னா
    ஈ. கணிதம் – சகுந்தலா தேவி
  18. இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட வட்டார மொழி பத்திரிகை எது?
    அ. சுதேசமித்திரன்
    ஆ. பெங்கால் கெசட்
    இ. மராத்தா
    ஈ. சமாச்சார் தர்பன்
  19. ஹோம்ரூல் இயக்கத்தை சென்னையில் எந்த வருடம் அன்னி பெசன்ட் தொடங்கினார்?
    அ. 1911 ஆ. 1913
    இ. 1916 ஈ. 1918
  20. அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்?
    அ. முகமது இக்பால்
    ஆ. அலி சகோதரர்கள்
    இ. முகமது அலி ஜின்னா
    ஈ. சர் சையது அகமது கான்

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 1

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 2

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 3

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 4

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 5

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 6

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 10

  1. இ. 1905
  2. அ. ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
  3. ஈ. அன்னி பெசன்ட் –
    பகுஜன் சமாஜ்
    (பிரம்ம ஞான சபை)
  4. இ. சரோஜினி நாயுடு (கவிக்குயில்)
  5. ஆ. சுதேசமித்திரன்
  6. ஆ. கொல்கத்தா
  7. ஈ. வினோபா பாவே – வந்தே மாதரம் (தனிநபர் சத்யாகிரகம்)
  8. இ. A – 2, B – 1, C – 4, D – 3
  9. ஈ. சுதந்திரம் எனது பிறப்புரிமை – லாலா லஜபதிராய்
    (திலகர்)
  10. ஆ. இரண்டாம் பகதூர் ஷா
  11. அ. நவசக்தி
  12. இ. கி.பி. 1932
  13. ஆ. சூரத் பிளவு – 1909 (1907)
  14. ஈ. ரிப்பன் பிரபு
  15. ஆ. சர் அயர் கூட்
  16. அ. மதன் மோகன் மாளவியா
    (1916)
  17. இ. பாகிஸ்தான் என்று பெயர் வைத்தவர்
    – முகமது அலி ஜின்னா
    (முகமது இக்பால்)
  18. ஆ. பெங்கால் கெசட்
  19. இ. 1916
  20. ஈ. சர் சையது அகமது கான்
    (1875 இல் முகமது ஆங்கிலோ ஒரியன்டல் கல்லூரி. பின்னர் 1920 இல் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம்)

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: