டி.என்.பி.எஸ்.சி. புதிய அட்டவணை விரைவில்

டி.என்.பி.எஸ்.சி புதிய தலைவராகப் பாலச்சந்திரன் பொறுப்பேற்பு!

TNPSC New Annual Planner 2020 – Soon 

TNPSC Latest News

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட புதிய அட்டவணை விரைவில் வெளியாகும் என்று அதன் தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்து உள்ளார்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த அருள்மொழியின் பதவிக்காலம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்ததையடுத்து அதன் புதிய தலைவராக வணிகவரி மற்றும் பதிவுத்துறை முதன்மைச் செயலாளராக இருந்த பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். இன்று நியமிக்கப்பட்டார். டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமிக்கப்பட்ட உடன், சென்னை பாரிமுனையில் உள்ள அதன் அலுவலகத்தில் பாலச்சந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

TNPSC Group 2 2A Study Materials PDF

தலைவராக பொறுப்பேற்ற உடன், செயலாளர் நந்தகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் மற்றும் ஆணைய உறுப்பினர்களுடன், பாலச்சந்திரன் ஆலோசனையில் ஈடுபட்டார். குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 தேர்வுகளில் எழுந்த தொடர் முறைகேடு புகார்களை அடுத்து, 12 புதிய தேர்வு மற்றும் மதிப்பீட்டு சீர்திருத்தங்களை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகம் செய்தது.

அதற்குப் பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் முதல் நடைபெறவிருந்த தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் காலவரையின்றி ஒத்திவைத்தது.

இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட புதிய அட்டவணையை வெளியிடுவது தொடர்பாக புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பாலச்சந்திரன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக்குப் பின்னர் விரைவில் புதிய திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று பாலச்சந்திரன் தகவல் தெரிவித்தார்.

TNPSC Study Materials PDF

புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பாலச்சந்திரன் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவியில் நீடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC UNIT 8 & UNIT 9 PDFs

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: